Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 ஓட்டு வங்கி அரசியல் செய்கிறது தி.மு.க.,

 ஓட்டு வங்கி அரசியல் செய்கிறது தி.மு.க.,

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை ஏமாற்றிய தி.மு.க., அரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். கொரோனா காலத்தில் போதிய நிதி இல்லாத சூழலிலும், அ.தி.மு.க., ஆட்சியில் டாக்டர்கள், செவிலியர்களை பணியமர்த்தினர்.

தமிழர்களுக்கு தலைகுனிவு ஏற்படுத்தும் விதமாக, தென்னிந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு மிக மோசமாக உள்ளது. தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்பி, ஆட்சி மாற்றத்தை கொண்டு வர மகளிர் தான் அடித்தளமாக இருப்பர்.

கோவிலுக்கு போகாதவர்களுக்கும், கோவிலைப் பற்றி கவலைப்படாதவர்களுக்கும், நெற்றியில் பொட்டு வைப்பதே தவறு என நினைப்பவர்களுக்கும் ஓட்டு போடாதீர். அனைத்து மதமும் சமம் என கருதுவோருக்கு ஓட்டளியுங்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் தான், மகளிருக்கு அதிக திட்டங்கள் கொடுக்கப்பட்டன.

ஆனால், தி.மு.க.,வினர் ஓட்டு வங்கி அரசியல் தான் செய்கின்றனர். மத்திய அரசை எதிரியாக பார்ப்பதால் தமிழகம் வளர முடியவில்லை.

- வாசன், தலைவர், த.மா.கா.,

Advertisement