Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


சோனியாவை அணுக முடியாமல் தவிக்கும் தி.மு.க., தலைமை

சோனியாவை அணுக முடியாமல் தவிக்கும் தி.மு.க., தலைமை

- நமது நிருபர் -

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை தி.மு.க., இறுதி செய்து வருகிறது.

'41 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவிகள், ஆட்சியில் பங்கு' என்ற காங்கிரசின் கோரிக்கையை, ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக் கொண்டது. ஆனால், தனது கோரிக்கையில் விடாப்பிடியாக இருந்த காங்கிரஸ் கட்சி, த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க பேசிக் கொண்டிருப்பது தி.மு.க.,விற்கு கோபத்தை ஏற்படுத்தியது.

கடந்த தேர்தல்களில் தொகுதிப் பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டபோது, தி.மு.க., தலைமை நேரடியாக சோனியாவை தொடர்புகொண்டு உடன்பாடு செய்தது. அதுபோல இந்த முறையும் சோனியாவை அணுகி பிரச்னையை முடித்து விடலாம் என, தி.மு.க., தலைமை நினைத்தது. இதனால், கடந்த ஜனவரி 28ம் தேதி டில்லி சென்ற தி.மு.க., துணைப் பொதுச்செயலர் கனிமொழி, ராகுலை சந்தித்துப் பேசினார். அப்போது, 41 தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா எம்.பி., பதவிகள், ஆட்சியில் பங்கு போன்ற கோரிக்கைகளை ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க., தலைமை, சோனியாவை சந்தித்துப் பேசி, தொகுதிப் பங்கீட்டை முடிக்க, சிதம்பரம் உள்ளிட்டோர் வாயிலாக முயற்சித்துள்ளது. ஆனாலும் எதுவும் நடக்கவில்லை.

காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 41 தொகுதிகள்; 2024 லோக்சபா தேர்தலில், 12 தொகுதிகள் பெற வேண்டும் என, ராகுல் உறுதியாக இருந்தார். ஆனால், கடைசியில் சோனியாவுடன் பேசி, குறைந்த தொகுதிகளை கொடுத்து தி.மு.க., உடன்பாடு செய்து விட்டது. இந்தத் தேர்தலில் அப்படி எதுவும் நடக்கக்கூடாது என்பதால், சோனியாவை தி.மு.க., சார்பில் யாரும் அணுக முடியாத நிலையை ராகுல் ஏற்படுத்தினார்.

கடந்த தேர்தல்களில் காங்கிரசுக்கு மாற்று வழிகள் இல்லாமல் இருந்தது. இப்போது த.வெ.க., இருப்பதால், அதிக தொகுதிகளைப் பெற்றே ஆக வேண்டும் என்பதில், ராகுல் உறுதியாக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement