திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்: இபிஎஸ்
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான கேள்வி ஒன்று தான். தமிழகம் வாழ வேண்டுமா? ஆம் ஆன்றால் திமுக வீழ்ந்தே ஆக வேண்டும் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியை குறிவைத்து கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, பாதிக்கபட்ட மாணவி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் மாணவி உயிருக்கு போராடி வருவதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த கொடூரக் குற்றத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கஞ்சா போதை,பாலியல் வன்கொடுமை,கொலை முயற்சி,இது தான் திமுக ஆட்சிக்காலம்!படிக்கும் கனவுகளோடு இருந்த மாணவியை, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராட வைத்திருப்பது தான் ஸ்டாலின் மாடல்.
இந்த மாடல் தான் மீண்டும் வரவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் துடித்துக்கொண்டு இருக்கிறார்.
நான் ஒன்றே ஒன்று கேட்கிறேன்-இத்தனை நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்த ஸ்டாலின், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதை பற்றி ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை பேசினாரா?
தன் ஆட்சிக்கான பொறுப்பு இல்லாத, என்ன நடக்கிறது என்று ஐடியாவே இல்லாத ஒரு முதல்வர் தமிழகத்தை ஆண்டது போதும்.
ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கான கேள்வி ஒன்று ஒன்று தான்-தமிழகம் வாழ வேண்டுமா? ஆம் என்றால், திமுக வீழ்ந்தே ஆகவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் இபிஎஸ் கூறியுள்ளார்.
Advertisement
அணைத்து திராவிட திருட்டு கட்சிகளும் ஒழிந்தால் தமிழகத்திற்கு விடிவுகாலம் தான்
நீ என்னதான் கத்தினாலும், கதறினாலும் ஆட்டம் உன் கையை விட்டு போய் விட்டது . உன்னுடைய ஆணவமும் , தர்குறித்தனமும், சாதுரியமற்ற போக்கும் உன்னை படு பாலத்துக்கு தள்ளிவிட்டுவிட்டது. இனி நீ வேஸ்ட் . உன்னால் பிஜேபிக்கு நஸ்டம். தனியாக கூட்டணி அமைத்து நின்றிந்தாலாவது வோட் எண்ணிக்கையாது கூட்டி இருக்கலாம். உன்னோடு சேர்ந்து அவர்களுடைய வளர்ச்சியும் போச்சு
DMK வீந்தாலும் பரவாயில்லை... ADMK வை காப்பாத்திக்கொள்ளுங்கள்..
மதவாத சக்திகளுக்கு இடமளித்து தமிழ்நாட்டின் நிம்மதியை கெடுக்காதீர்கள்.
தமிழ்நாட்டு அரசியல் மிகவும் தரம் தாழ்ந்து விட்டது எண்பதுற்கு இவரே சாட்சி . அரசியல் வசதிகள் அனைவரும் வசதியான கோடீஸ்வரர்கள். ஒருத்தகுக்கும் மக்களை பற்றிய அக்கறை இல்லை. மக்களுக்கும் நாட்டை பற்றிய அக்கறை இல்லை. அவன் அவன் விருப்பதை சொல்லு கிரஸ்ட்களே ஒழிய நல்ல திட்டங்களை செய்ய masttaarkal
தலைவன் தற்குறி, தொண்டன் 200 ஓவாய் கொத்தடிமை..., அமைச்சர்கள் பரம்பரை பரம்பரையாக கொத்தடிமை யாக இருக்க விருப்பம், இது போன்ற ஒரு திரணற்ற ஆட்சியை மக்கள் அகற்ற முடிவு செய்து விட்டார்கள்.

இந்த தேர்தல்ல நீ 2 இலக்கம் கிடைக்கிறதே கஷடம் , அடுத்த தேர்தல்ல வேட்ப்பாளரே இருக்க மாடடானுக உனக்கு , பேசாம திமுகவில் சேந்து எதாவது ஒரு டம்மி அமைச்சர் பதவி பதவியை வாங்கிட்டு , இடப்படில கட்ட பஞ்சாயத்து பண்ணிட்டு பொழப்ப பாரு இல்லாட்டி பிஜேபி கண்ட வித்துட்டு போய்டு நீ எல்லாம் என் நாட்டுக்கு முதலமைச்சர் ? என்ன கொடுமைடா சாமி