Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 கூட்டணி மாறியும் 'கை' கூடல: சோகத்தில் தே.மு.தி.க.,வினர்

 கூட்டணி மாறியும் 'கை' கூடல: சோகத்தில் தே.மு.தி.க.,வினர்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

விருதுநகர்: தே.மு.தி.க., விஜய பிரபாகரன் அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து மாறி தி.மு.க., கூட்டணிக்கு வந்தும் வெற்றி 'கை' கூடவில்லை. இதற்கு காங்., வி.சி., கட்சி யினரின் ஒத்துழைப்பு இல்லாததும், தி.மு.க.,வுக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டதும் ஒரு காரணம். 2024 லோக்சபா தேர் தலில் நுாலிழையில் தோற்ற இவர் இந்த முறையும் விருதுநகரில் தோற்றுள்ளார்.

2024 லோக்சபா தேர்தலில் தே.மு.தி.க., விஜயபிரபாகரன் அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டார். இதில் பா.ஜ., கூட்டணி தனித்து போட்டியிட்டதால் விஜய பிரபாகரன் வெற்றி வாய்ப்பை இழந்தார். காங். எம்.பி., மாணிக்கம் தாகூரிடம் 4379 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார்.

மறுஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்ததோடு, மாணிக்கம் தாகூர் வெற்றி யில் சந்தேகம் இருப்பதாக சர்ச்சையை கிளப்பினர். இந்நிலையில் 2026ல் தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்வதற்கு ஒரு மாதத்திற்கு முன் 'காங்கிரசை மட்டும் நம்பாதீர்கள் அண்ணா' என த.வெ.க., தலைவர் விஜய்க்கு அட்வைஸ் கூறினார்.

இந்நிலையில் ஒரே மாதத்தில் அவரது தாய் பிரேமலதா தி.மு.க., கூட்டணியில் இணைந்து 10 எம்.எல்.ஏ.,சீட்டும், ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும் பெற்றார். இதில் விருதுநகர் சட்டசபை தொகுதியில் விஜயபிரபாகரன் போட்டியிட்டார். இவரது வருகையை உள்ளூர் தி.மு.க.,வினர் விரும்பவில்லை.

காங்., கட்சியினர் பிரசாரத்தில் தங்கள் பங் களிப்பை பெரிதாக அளிக்கவில்லை. உதயநிதி வந்த பிரசாரக் கூட்டத்தில் கூட காங்., கொடியை ரோட்டோரம் நட்டு மட்டுமே வைத்திருந்தனர். பிடித்து கோஷமிட ஆளில்லை. வி.சி., தலைவர் திருமாவளவனை பிரேமலதா அவமரியாதை செய்ததாலும், தேர்தல் அலுவலக திறப்பு மீட்டிங்கில் வி.சி.,யினர் கொடியை கட்டாததாலும், அக்கட்சியினரும் அதிருப்தியில் இருந்தனர். எம்.பி., மாணிக்கம் தாகூர் ஒரு நாள் கூட பிரசாரத்திற்கு வரவில்லை.

இந்நிலையில் முதல் சுற்றில் முன்னிலை வகித்த விஜயபிரபாகரன் 8வது சுற்று முதல் பின்தங்கினார். இறுதியில் த.வெ.க., வேட்பாளர் செல்வம் 9375 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். செல்வம் 64,160 ஓட்டுக்களும், தே.மு.தி.க., விஜய பிரபாகரன் 54,202, அ.தி.மு.க., கணேசன் 34,443 ஓட்டுக்களும் பெற்றனர்.

தோல்விக்கு முக்கிய காரணம் காங்., எம்.பி., மாணிக்கம் தாகூரின் ஆதர வாளர்கள், தி.மு.க., மீது அதிருப்தி கொண்ட காங்கிரசார், வி.சி.,யினர் தான். 2வது முறையாக விருதுநகர் தொகுதியை நம்பி வந்து தோற்றுள்ளதால் விஜயபிரபாகரன் துவண்டு போய் உள்ளார்.

Advertisement

மே 05, 2026 12:15 pm

DMDK died with vijayakant.It is a mirage now.

Reply Rate this
மே 05, 2026 08:43 am

கொள்கை இல்லாதவர்களுக்கு இது ஒரு பாடம் மக்கள் இந்த முறைதான் சரியாக தேர்வு செய்துள்ளனர்

Reply Rate this
மே 05, 2026 07:40 am

என்னா பேச்ச பேசினீங்க ஆணவத்தின் உச்சம் நீங்க பேசின பேச்சி

Reply Rate this
மே 05, 2026 06:56 am

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுச்சு பிரேமலதா அம்மையார்...ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு இந்த நிலை தேவை தான் ...

Reply Rate this
ஆமாம் நாதன்..கொளத்தூரில் கூட இப்படிதான்
மே 05, 2026 08:41 am
Rate this
Nathansamwi - Gobichettipalayam
ஸ்டாலின் தோல்வி மகிழ்ச்சியானா செய்தி தானே ....யார் மக்களுக்கு நல்லது செய்தலும் சிறப்பு தான் ...
மே 05, 2026 09:55 am
Rate this
மே 05, 2026 05:24 am

அங்கேயும் ஒரு துண்டு, இங்கேயும் ஒரு துண்டு என்று போட்டு வைத்து, இரண்டு பக்கமும் பெட்டிக்குப் பேரம் பேசி, கடைசியில் கூவத்தில் விழுந்து விட்டு, சந்தனம் மாதிரி மணக்கவில்லை, சாக்கடை மாதிரி நாறுகிறது என்று புலம்பி என்ன செய்வது?

Reply Rate this
மே 05, 2026 05:04 am

ரொம்ப பொலம்பாதீங்க பாசு கூட்டணி மாறினதே போட்டி மார்றதுக்கு தானே அதோட கொசுறு மாமாவை ராஜ்ய சபாவுக்கு அனுப்பியாச்சு அதோட சந்தோஷம் மற்றும் திருப்தி படணும் பேராசை பெரு நஷ்டம்

Reply Rate this
மே 05, 2026 03:45 am

ஹி ஹி... இவரது அம்மா தீம்க்காவுக்கு வெடிவைத்தது மகனுக்கு தெரியாமல் போனது துரதிஷ்டவசமானது.

Reply Rate this