Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தேஜ கூட்டணி பிரபலம் அடைவதால் திமுகவுக்கு அதிர்ச்சி: பிரதமர் மோடி

தேஜ கூட்டணி  பிரபலம் அடைவதால் திமுகவுக்கு அதிர்ச்சி: பிரதமர் மோடி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: '' தமிழகத்தில் தேஜ கூட்டணியின் பிரபலம் அதிகரித்து வருவதால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளது,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருச்சியில் நாளை பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலை, ரயில்வே மற்றும் பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளேன். 89 ஊரக சாலை திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளேன்.

மாலை 6:30 மணியளவில், திருச்சியில் நடக்கும் தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் தமிழகத்தின் கூட்டணி தலைவர்களோடு நானும் இணைகிறேன். தேஜ கூட்டணிக்கு மாநிலம் முழுவதும் பிரபலம் அடைந்து வருவதை கண்டு திமுக அதிர்ச்சியடைந்துள்ளது.
திமுகவின் தவறான நிர்வாகத்தையும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் தமிழக மக்கள் நன்கு அறிந்து உள்ளனர். அதனால் தான் தேஜ கூட்டணியின் நம்பிக்கை மற்றும் முன்னேற்ற திட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர். இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement