Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 எட்டு பேருக்கு தொகுதி வேண்டும்: புதிய நெருக்கடியில் பிரேமலதா

 எட்டு பேருக்கு தொகுதி வேண்டும்: புதிய நெருக்கடியில் பிரேமலதா
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தே.மு.தி.க.,வில் எட்டு பேருக்கு தொகுதிகளை உறுதிசெய்ய வேண்டிய நெருக்கடிக்கு, அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா தள்ளப்பட்டுள்ளார்.

கூட்டணி அமைப்பதில் எந்த முடிவையும், தே.மு.தி.க., தலைமை இன்னும் அறிவிக்கவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் எட்டு தொகுதிகள் வரை கொடுக்க, அக்கட்சி முன்வந்தது. ஆனால், ராஜ்யசபா 'சீட்' மற்றும் தன் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை பிரேமலதா எதிர்பார்த்தார். இதனால், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைவது இழுபறியாகி உள்ளது.
இதேபோல, தி.மு.க., கூட்டணியிலும் தே.மு.தி.க.,வை இழுக்க பேச்சு நடந்து வருகிறது. அக்கட்சி தரப்பில் ஆறு தொகுதிகள் வரை தருவதாக உறுதியளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஒரு ராஜ்யசபா சீட்டும் 10 தொகுதிகளும் வேண்டும் என, பிரேமலதா வலியுறுத்தியதாக தெரிகிறது. இதனால், கூட்டணி குறித்த முடிவை அறிவிக்காமல், மதில்மேல் பூனையாக தே.மு.தி.க., உள்ளது.
இதனிடையே, கட்சியில் எட்டு பேருக்கு தொகுதிகளை உறுதிசெய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு, பிரேமலதா தள்ளப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுகுறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
கடந்த 2011 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., 29 இடங்களில் வெற்றி பெற்று, எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றியது. அப்போது, எம்.எல்.ஏ.,வாக இருந்த பலரும் தே.மு.தி.க.,வில் இருந்து விலகி மாற்று கட்சிகளுக்கு சென்று விட்டனர்.
சேலம் மோகன்ராஜ், விருகம்பாக்கம் பார்த்தசாரதி, விழுப்புரம் வெங்கடேசன், எழும்பூர் நல்லதம்பி, கெங்கவல்லி சுபா ஆகியோர் கட்சியில் எஞ்சியுள்ளனர். இவர்களுக்கு மீண்டும் 'சீட்' உறுதிசெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இதேபோல, கட்சிக்கு அதிகளவில் நிதியுதவி செய்யும், மாநில அவைத்தலைவர் தர்மபுரி இளங்கோவன், திருவள்ளூர் மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கும் சீட் உறுதி செய்ய வேண்டும்.

விஜயகாந்த் வெற்றி பெற்ற ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட, பிரேமலதா விரும்புகிறார். அதன்படி, எட்டு பேருக்கு தொகுதிகளை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பிரேமலதா உள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Advertisement