விஜய் விளக்கத்தில் கவர்னருக்கு திருப்தியில்லை; ஆட்சி அமைப்பதில் தொடரும் சிக்கல்
சென்னை: பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள் என்ற கேள்விக்கு விஜய் அளித்த விளக்கத்தில் கவர்னருக்கு திருப்தியில்லை. இதனால், தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
கவர்னர் அர்லேக்கரை சந்தித்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதம் கொடுத்து இருந்தார். போதுமான எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை பெற்று வருமாறு கவர்னர் அறிவுறுத்தியதை அடுத்து, தமிழக அரசியல் களம் சூடு பிடித்தது.
இந்நிலையில் விஜய்க்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், ஆட்சி அமைப்பது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்க கவர்னர் அழைப்பு விடுத்து இருந்தார். அழைப்பின் பேரில், இன்று காலை 11 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு தவெக தலைவர் விஜய் வந்தார். விஜய் இடம் கவர்னர் ஆட்சி அமைப்பது தொடர்பாக சில விளக்கங்களை கேட்டு உள்ளார்.
கவர்னர் திட்டவட்டம்
''113 எம்எல்ஏக்களை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? வேறு எந்த கட்சி தவெக அரசை ஆதரிக்கும்? பதவி ஏற்ற பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று எப்படி நம்புகிறீர்கள்? உங்களிடம் இருக்கும் எம்எல்ஏக்களை வைத்து நிலையான அரசை அமைக்க முடியுமா?
118 எம்எல்ஏக்கள் ஆதரவை இருப்பதை காட்டுங்கள், அவ்வாறு நிரூபித்தால் மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும். பெரும்பான்மை கிடைத்துவிடும் எனும் யூகத்தின் அடிப்படையில் செயல்பட முடியுமா?' என்று விஜயிடம் தமிழக கவர்னர் அர்லேக்கர் கேள்விகளை எழுப்பினார். அப்போது அவரிடம், விதிமுறைகளின்படி தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று விஜய் மீண்டும் வலியுறுத்தினார்.
விஜய் கவர்னரை சந்திப்பது, 24 மணி நேரத்தில் இது இரண்டாம் முறை.
பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள் என்ற கவர்னரின் கேள்விகளுக்கு விஜய் நேரடியாக பதில் அளிக்க முடியவில்லை. அவர் அளித்த விளக்கத்தில் கவர்னருக்கு திருப்தி இல்லை. இதனால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது, பதவிப்பிரமாணம் செய்து வைப்பது பற்றி கவர்னர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
முன்னதாக, கவர்னர் மாளிகைக்கு விஜய் மற்றும் கட்சியினர் சென்றபோது, அவரது காருக்கு மட்டுமே உள்ளே செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவருடன் சென்ற கட்சியினர் கார்களை போலீசார் அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இபிஎஸ்க்கும் அழைப்பு
கவர்னர் அர்லேக்கர் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்சுக்கும் நேரில் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்து இருக்கிறார். அதன்படி கவர்னரை சந்தித்து இபிஎஸ் பேச உள்ளார். அடுத்தபடியாக, காபந்து முதல்வர் ஸ்டாலினுக்கும் கவர்னர் அழைப்பு விடுத்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தமிழக கவர்னர் அர்லேக்கரை விஜய் சந்தித்து பேச்சு; தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையதளத்தில் நேரலை ஒளிபரப்பு
வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
Advertisement
அரசியல் சட்டம் சொல்வது படி பெரும்பான்மை எண்ணிக்கை உள்ள கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோருவதும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைப்பது மட்டுமே. விஜயின் தற்போதுள்ள சூழலில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு என்பதும், பெரும்பான்மை நிரூபிப்பது ஆளுநர் மாளிகையில் அல்ல, அது சட்ட சபையில் நடக்க வேண்டும் என்ற வாதமும் சரியே. ஆனால் ஆளுநர் காலம் தாழ்த்துவது விஜய்க்கு நன்மையே. பதவி பிரமாணம் செய்வதற்கு முன்பு குதிரை பேரம் நடப்பதற்கும், முதல்வர் ஆனதுக்கு பிறகு நடப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. விஜய் எவ்வளவு விரைவாக 118 க்கு மேல் எண்ணிக்கை இப்போதே முடிவு செய்கிறாரோ அது அவருக்கு நல்லது.
விஜய்க்கு சரியான வழிகாட்டுதல் அண்ணாமலையால் முடியும். அவரை சந்தித்து பேராசை வேண்டும். திராவிட விஷமிகள் ஒன்று கூடினால் மக்கள் தலையில் பெரிய இடி தான் விழும்
அதிமுக உடைந்து விஜய் கிட்ட வரும்.. எதிர் கட்சியாக உட்காருவது பத்து பைசாவிற்கு பிரயோஜனம் இல்லை என்பது அவர்களுக்கு தெரியும்..
விசிக கம்யூனிஸ்டை நம்பி பதவி ஏற்க கூடாது. கடிதம் கொடுத்தால் மட்டுமே நம்பிக்கை வரும். திருமா தினம் ஒன்று பேசுவார்.
சட்ட மன்றத்தில் விஜய்க்கு மானம் போய் விடும். அதற்கு தான் விஜயயைஆட்சி அமைக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர்.
இந்த தேர்தல் அதிமுக வெற்றி அல்லது பெரும் மெஜாரிட்டி பெற்றிந்தால் கூட பொதுமக்கள் நன்மைக்கு சிறிதளவேனும் நன்மை பயத்திருக்கும் ... ஒன்றுக்கும் உபயோகம் இல்லாத .. ஒன்றியத்தை எதிர்த்து பேச கூட வக்கற்ற ஒரு சினிமா மோக கட்சிக்கி வாக்களித்த மக்களை நினைத்து வெட்கப்படுகிறேன். ...ஒன்றிய சகுனிதனமான சூத்ரதாரிகளின் திட்டம் தமிழகத்தில் வேரெடுப்பது தமிழகத்துக்கு என்றுமே நன்மை பயக்காது ..... இதை முறியடிக்கும் வல்லமை திமுகவுக்கு மட்டுமே உள்ளது ......திமுக நேர்மறை அரசியலை கைவிட்டு பிஜேபி பாணி அரசிலை முன்னெடுத்து தமிழக மக்களை காத்திடுவது தமிழக மக்களின் நீண்டகாலநலனுக்கும் மற்றும் குறுகியகால நலனுக்கும் உகந்தது .... கட்சிகளை உடைப்பதும் .....கட்சிகளை பிரிப்பதும் தான் தற்போதைய அரசியல் ....அந்த உத்தியை மக்களின் நெடுநாள் நன்மையை முன்னிறுத்தி கையில் எடுப்பது மக்களை காப்பது திமுகவின் கடமை ... ALL IS FAIR IN POLITICS
எப்படி தன்னுடைய பாப்புலாரிட்டி மற்றும் தன் ""முகம்& பெயர்""" ஆகியவற்றுக்காக தானே ஒவ்வொரு தொகுதியிலும் போட்டி இடுவதாக நினைத்து ஓட்டளியுங்கள் என்று சொன்னாரோ அதுபடியே முடிவுகளை விஜய் மட்டுமே எடுத்தால் தான் அவர் ஆட்சியில் அமர முடியும். விஜய் தன் கட்சிக்கு ஆதரவு தரும்படி அவரே நேரடியாக கேட்டிருந்தால் இந்நேரம் அதிமுகவிடம் கிடைத்திருக்கும்ஆட்சி அமைந்திருக்கும். அதே போல், ஜகன் மோஹன் ரெட்டி அறிவுரை கூறியபடி மத்திய அரசிடம் சுமுகமாக இருந்தால் நல்லது. நீங்கள் மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலும்.
நாசமாக்கும் ஒட்டகமான காங்கிரஸை தவெகவிற்கு கூட்டணி ஆக்கிய ஆதவ் அர்ஜூனா கண்டிப்பாக காங்கிரஸால் முதுகில் குத்தப்படுவது உறுதி.
தற்குறிகளுக்கு காங்கிரஸும் இப்போ ஒரு தேவையில்லாத வேஸ்ட் லக்கேஜ் .... அந்த வேஸ்ட் லக்கேஜை கழட்டி விடும் வரை தமிழக கெவுனர் மனம் குளிரமாட்டார். ஹா ஹா ஹா .... உள்ளதும் போச்சே நொள்ளக்கண்ணா நிலை காங்கிரஸுக்கு ..... இனி எந்த காலத்திலும் திமுக காங்கிரசை சேர்க்கக்கூடாது .... குமரி மாவட்டத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தி அங்கும் அவர்களை காணாமல் அடிக்க செய்யவேண்டியதை தீர்க்கமாக செயல்படவேண்டியது மற்றும் தரமாக களமாடுவது திமுக கடமை .... அதே போல கோவையிலும் மதவாத சக்தியை காணாமல் போக செய்யவேண்டியதும் திமுகவின் தாரகமந்திரமாக மாறவேண்டும் ......
ஏண்டா திமுகவை தேர்ந்துடுக்க தவறினோம் என்று தினம் தினம் வேதனை பட போகிறார்கள் தமிழக மக்கள் .... விதம் விதமாக தற்குறிகளை தாளம் போடவைக்கப்போவதை பார்த்து ரத்த கண்ணீர் விட போகிறார்கள் தமிழகமக்கள். ரகம் ரகமாக தற்குறிகளை ஆடவைக்கப்போவதை பார்த்து மனம் வெறுத்து போகப்போகிறார்கள் இழக்க மக்கள். .....கேடுகெட்ட தார்மீகமற்ற அறமற்ற அரசியலை பிஜேபி ஆடுவதை பார்த்து தமிழக மக்கள் அவர்களை மனதில் இருந்து மேலும் சுத்தமாக துடைத்தெறிவார்கள். ஊட்டி கொடுத்த ஊட்டி மக்கள் கூட காரியுமிழும்நிலைக்கி கட்சியை தள்ளுகிறார்கள்.
Governor to Vijay:
107 க்கு 118ன்னு போட்டிருக்கீங்க
நிர்மல் குமாருக்கு இருமல் குமார்னு போட்டிருக்கீங்க vs பாபுவுக்கு வினோத் பாபுன்னு போட்டிருக்கீங்க
திருத்தி எழுதி கொண்டு வாங்க..
On the lines of Vadivelu movie joke

ஒண்ணு , இங்கே உள்ள கட்சிகள் தலைவர்கள் உடன் பயணிக்க வேண்டும் . . . இல்லேன்னா ,
டில்லி சொல்றபடி ஆடி பாடி , டிராமா போட்டு விட வேண்டும் . . . . சினிமா கம்பெனிலதான் இவருக்கு ஏற்ற கதை , உடை வசனங்கள், நடிகை ஜோடிகள் , அதோட , கேக்குற அமௌண்டும் கிடைக்கும் . . .
சில நேரம் டூப்பு போட்டு கூட படத்தை முடித்து விடலாம் . . . . ஆனால் , இங்கே எல்லாமே மற்றவர்கள் , முடிவு படிதான் , கட்சி என்பது , தொண்டர்கள் , விருப்பப்படி , . . . , ஓட்டு , ஆட்சி , எல்லாம் மக்கள் விருப்பப்படி ,