எடப்பாடியில் இபிஎஸ், சென்னையில் விஜய், சீமான் ஓட்டுப்பதிவு
நமது நிருபர்
சேலம் சிலுவம்பாளையத்தில் மனைவி, மகனுடன் வந்து, 8வது முறையாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் இபிஎஸ் ஓட்டளித்தார். அதேபோல், சென்னை நீலாங்கரை ஓட்டுச்சாவடியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் ஓட்டளித்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.
சேலத்தில் ஓட்டளித்த பிறகு நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: நடந்து வரும் சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள அனைவரும் ஓட்டுச்சாவடிக்கு சென்று தனது ஜனநாயக கடமையை ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நான் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன், என்றார்.
அதேபோல், சென்னை நீலாங்கரை ஓட்டுச்சாவடி மையத்தில் ஜனநாயக கடமையாற்றிய பிறகு நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: வெளிநாடுகளில் வாழும் நமது சொந்தங்களில் சிலர் ஆர்வமாக ஓட்டளிக்க வருகின்றனர். சிலர் வர முடியாமல் போய் விடுகிறது. இங்கே தேர்தல் அதிகாரிகள், போலீசாருக்கு தபால் ஓட்டு செலுத்த வைக்கிறார்களோ, அதே மாதிரி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
சிலர் தொகுதிகள் நிற்க வேண்டும் என்றால் அவர்கள் ஓட்டுகளை செலுத்த முடியாமல் போய்விடுகிறது. அதனை தவிர்ப்பதற்கு தேர்தல் கமிஷன் கவனத்தில் எடுத்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயக நாட்டில் நமக்கு இருக்கும் கடைசி வலிமை, கருவி என்பது ஓட்டு தான். அதனை நாம் எல்லோரும் பயன்படுத்த வேண்டும். ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு 75 சதவீதம், 80 சதவீதம் என 100 சதவீதம் வாக்கில் இவ்வளவு தான் பதிவு ஆகிறது என்றால் ஓட்டு செலுத்தாதவர்களுக்கு என்ன பிரச்னை என்று கேள்வி வருகிறது.
உங்களை நம்பி தான் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 100 சதவீதம் ஓட்டினை செலுத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் சொல்கிறது. அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து கணக்கில் காட்டாமல் மறைப்பது இது எல்லாம் தான் தேச துரோகம் என்பது இல்லை. ஓட்டு செலுத்தாமல் இருப்பதும் ஒருவித தேச விரோத குற்றம் தான். ஜனநாகய துரோகம் தான். இதனை மக்கள் செய்ய கூடாது.
கற்றவர்கள் தான் மற்றவர்களுக்கு வழி காட்ட வேண்டும், எல்லோரும் நாம் ஒரு ஓட்டு செலுத்தி என்னவாக போகிறது என்று நினைக்கின்றனர். அப்படி இல்லை ஒரு வாக்கில் இருந்து தான் மாற்றம் வரும். ஓட்டளிப்பது நம் பொறுப்பும், கடமையும், முதன்மையானது. தவறாமல் அனைவரும் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.
ஓட்டளித்த தலைவர்கள்!
அதேபோல் மத்திய அமைச்சர், எல்.முருகன், பாமக தலைவர் அன்புமணி, தவெக தலைவர் விஜய், அமமுக பொதுச்செயலாளர் தினகரன் உள்ளிட்டோர் ஓட்டளித்தனர்.
Advertisement
அகில இந்திய அளவில் பாஜக ஏற்கனவே சரிவைச் சந்தித்து வருகிறது. மக்களவையில் அவர்களுக்கு ஒற்றைக் கட்சிப் பெரும்பான்மை இல்லை, மத்தியிலும் பாஜக சிறுபான்மை அரசே ஆட்சியில் உள்ளது. சில அடிமைத்தனமான கட்சிகளின் உதவியுடன் தமிழ்நாட்டில் காலூன்ற அவர்கள் விரும்புகிறார்கள், இது முற்றிலும் சாத்தியமற்றது
ஜெயித்தாலும் தோற்றாலும் தேர்தலுக்கு பிறகு தி மு க, - பிஜேபி பக்கம் ஒதுங்கப்போறதுதான் அடுத்த காமடி.
இதுல ஒருத்தர் மட்டும் பணம் அச்சடிக்கும் மெஷின் பாகிஸ்தான்க்கு குடுத்த மாதிரி தானும் ஜெயிக்க எதை வேண்டுமானாலும் செய்வார். UPA இரண்டில் தோல்வியை தழுவி பின்னர் இரண்டு நாள்கள் ரிசல்ட் நிறுத்தி வைத்து பேரம் பேசி ஜெயித்தவறிடம் கெஞ்சி ஜெயித்த மாதிரி அறிவித்து கொண்டார்.
ஆமா... ஒரு மாபெரும் அரசியல்வாதி... சுதந்திர போராட்ட காலத்திலிருந்து கட்சி நடத்தி... தன் சொத்து, சுகம், சொந்த பந்ததைத்தையெல்லாம் இழந்து, கோவைச் சிறையில் செக்கிழுத்த வ.உ.சிதம்பரனார் போல, மக்களுக்காக பாடுபட்டு வரும் விஜய்... மேலும் 2 மணிநேரம் வாக்குப் பதிவை நீட்டிக்கணும்னு அறிக்கை விட்டிருக்கிறாமே...? காலை 7 மணி முதல் கடந்த 6 மணிநேரமா... இவர் கட்சியைச் சேர்ந்த சில்லுண்டிப் பசங்களான தற்குறிகளே வாக்குச் சாவடியில் வரிசையில் நின்னு ஓட்டே போடலை... இவர் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுகிறார்...
இத்தனை தலைகளும் தேர்தலில் தோற்றால் மக்களுக்கு விடிவு காலம் கிடைக்கும்.
பனையூர் பண்ணையார் ஓட்டு பெட்டியை பனையூர் வீட்டுக்கு எடுத்து வர சொல்லி கேட்டிருப்பார்.
வெளி நாடுகளில் இருக்கும் இந்திய வாக்காளர்களுக்கும் ஓட்டுரிமை கிடைக்கும் வகையில் வீடியோ கால் மூலம் ஓட் வரிசை எண், ஆதார் எண், தேர்தல்துறையால் வழங்கபட்ட தேர்தல் அட்டை, மூலம் ஆராய்ந்து , அவர்களுக்கும் ஓட்டுரிமை கொடுத்தல் நூறு சதவிகித வகை தேர்தல் துறை பெற முடியும், தேர்தல் கமிஷன் இதனை செய்ய முன் வருமா?
எங்க வார் ரூம் ஓனர்... அமிரிக்கா போயி பெட்ரோல் பம்ப்ப கதறடிக்க போற முன்னாள் சிப்பு போலீஸ் ஓட்டு போட்டாறான்னு முதல் பத்தி நியூஸ் வரலன்னு ரோஜனையா இருக்கு...

அந்த நடிகரும் அரசியல்வாதியுமானவரிடம் தமிழ்நாட்டைப் பற்றிய எந்த நுண்ணிய அல்லது பரந்த தரவுகளும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பிரச்சினையும் அவருக்குத் தெரியாது. முறையான பகுப்பாய்வோ அல்லது அதற்கான தீர்வோ இல்லாமல் அவர் வெறுமனே காற்றில் பேசுகிறார். அதன் செலவினங்களை அறியாமலும், அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்காகவும் ஏதோ ஒரு தேர்தல் அறிக்கையை வெறுமனே வெளியிடுகிறார்.
நமது வெறித்தனமான ஆதரவாளர்கள் அதை வெறுமனே ஆரவாரம் செய்கிறார்கள். நீங்கள் மாறாத வரை அல்லது சரியாகச் சிந்திக்காத வரை எதுவும் மாறாது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்