மேற்குவங்க முதற்கட்டத் தேர்தல்; 91.58 % ஓட்டுப்பதிவு
கோல்கட்டா: 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் முதற்கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 91.58 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்கத்திற்கும் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. 294 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்திற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. திரிணமுல் காங்கிரஸ் - பாஜ இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
முதற்கட்டமாக 16 மாவட்டங்களில் உள்ள 152 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடந்தது. எஞ்சிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 29ம் தேதி 2வது கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. ஓட்டுப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற்றது.தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 2.4 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.
அதிகாலை முதலே வாக்காளர்கள் ஆர்வமாக வரிசையில் நின்று ஓட்டளித்தனர். மாலை 6 மணி நிலவரப்படி 91.58 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
#WATCH | West Bengal Elections 2026 | Visuals of the violence in Murshidabad as a clash broke out between TMC and Aam Janata Unnayan Party (AUJP) party workers.
— ANI (@ANI) April 23, 2026
Stones are also being pelted at each other. Police and central security forces try to control the situation. pic.twitter.com/ScMeW1gSNJ
35 ஆண்டு கால மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியை கடந்த 2011ம் ஆண்டு வீழ்த்தி ஆட்சிக்கு வந்த மம்தா, தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியை தக்க வைத்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் 215 இடங்களில் மம்தா கட்சி வென்றது. பாஜ 77 இடங்களைக் கைப்பற்றியது.
மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால், 89 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்த சூழலில் அங்கு முதல்முறையாக தேர்தல் நடைபெற்று வருகிறது.
Advertisement
34 ஆண்டுகளாக இந்தியாவிற்கு இடதுசாரிகளையும், அதைத் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஒரு பிராந்திய சக்தியையும் வழங்கிய ஒரு மாநிலம் காவி நிறத்திற்கு மாறுவது இந்தியாவின் அரசியல் வரைபடத்தை நிரந்தரமாக மாற்றியமைக்கும். திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தீதி மம்தா தப்பிப் பிழைப்பார், தேசிய அளவில் பாஜகவிற்கு எதிரான பிராந்திய எதிர்ப்பின் முகமாகத் தொடர்வார், மேலும் பாஜகவால் உடைக்க முடியாத ஒரே பெரிய இந்தி பேசும் மாநிலமாக வங்காளம் இருக்கும். எப்படியிருந்தாலும் நிச்சயமற்ற தன்மையின் பரபரப்பால் வங்காளம் சூழப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் மையக் கருத்தான மாற்றம், காற்றில் பரவியிருக்கலாம். மே 4 அன்று வங்காளத்தின் தேர்தல் முடிவுகள் நாட்டையே உலுக்கும் என்பதில் சந்தேகமில்லை
90 சதவீதம்? ஊடுருவல் பச்சைகளையும் சேர்த்தா?.இல்லாமல் இது சாத்தியமல்ல.
ஊடுருவல்கார்களை விரட்டியடிக்க வேண்டும். சமீபத்தில் அண்டை நாடுகளில் பல நடந்த கொடுர படுகொலை நியாயம் கிடைக்க வேண்டும். அதற்கு ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு.
இவ்வளவு மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வருகிறார்கள் என்றால் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வருகிறது என்றுதான் பொருள். வரட்டும். மக்கள் வாழ்வு சிறக்கட்டும்.
மேற்கு வங்கத்தில் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் பிரம்மாண்டமான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 62.18% சதவீத வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும், 2 அல்லது 3 சம்பவங்களைத் தவிர, இதுவரை பெரிய அளவிலான வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை.
வாக்குப்பதிவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு,பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ககேந்திர நாத் மஹதோ, திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து இருக்கிறார். இது அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதால் அல்ல, மாறாக வாக்குப்பதிவு தொடங்கும் வேளையில் நடக்கிறது. இது மேற்குவங்க கள நிலவரம் மாறுவதற்கான அறிகுறியை காட்டுகிறது. எனவே தீதிக்கு ஆப்பு உறுதி!

இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு?