Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தி.மு.க.,வில் நான்கு அதிகார மையங்கள்: பிரசாரம் துவக்கி பழனிசாமி காட்டம்

 தி.மு.க.,வில் நான்கு அதிகார மையங்கள்: பிரசாரம் துவக்கி பழனிசாமி காட்டம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தி.மு.க., கூட்டணி கட்சிகள் அடிமைகளாக இருப்பதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை, மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த பின், தன் தேர்தல் பிரசாரத்தை, பழனிசாமி நேற்று துவக்கினார். பின் அவர் பேசியதாவது: பத்து ஆண்டுகளாக, தி.மு.க.,வுக்கு கூட்டணி கட்சிகள் அடிமையாக இருக்கின்றன. அதனால்தான், 2021ல் பெற்றதை விட, குறைவான தொகுதிகளை பெற்றுள்ளன.

பச்சை பொய்@@subtile@@
ஆட்சியை புகழ்ந்து பாட கூட்டணி கட்சிகளை, தி.மு.க., பயன்படுத்திக் கொண்டது. ஆனால், தேர்தல் வந்ததும் தகுந்த அந்தஸ்தை கொடுக்கவில்லை. மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற வி.சி.க.,வுக்கு எட்டு தொகுதிகள். அங் கீகாரம் இல்லாத கட்சிக்கு, அதிக இடங்களை கொடுத்து உள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் நேரு, மேயர் பிரியா ஆகியோரும், மழைநீர் வடிகால் பணிகள், 98 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாக பச்சைப்பொய் கூறினர்.

சென்னையில் தண்ணீர் தேங்காது என்றனர். ஓராண்டுக்கு முன், சென்னையில் சாதாரண மழை பொழிந்தது; எல்லா ஏரியாவிலும் தண்ணீர் தேங்கியது. அப்போது ஒரு பெண்மணி, 'ஸ்டாலின் தான் வந்தாரு… நீச்சலடிக்க விட்டாரு' என்று கூறினார்.

தி.மு.க., ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மருமகன் சபரீசன், மனைவி துர்கா என்று, நான்கு அதிகார மையங்கள் உள்ளன. இந்த நான்கு அதிகார மையத்துக்கும் முடிவுகட்டும் தேர்தல் வரக்கூடிய தேர்தல்.

கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில், 73 ஆண்டுகளாக வாங்கிய மொத்த கடனே, 4.85 லட்சம் கோடி ரூபாய் தான். ஆனால், இந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டனர்.

மக்களின் உடல் உறுப்புகளை, தி.மு.க., - எம்.எல்.ஏ., திருடுகிறார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழிசையால் சர்சை


பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்ட மயிலாப்பூர் தொகுதிக்கு, இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், பழனிசாமியுடன், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை உடனிருந்தது பா.ஜ.,வில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து. பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் இன்று சென்னை வந்து விசாரிக்கிறார்.

எல்லாமே புதன்!



'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, தற்போது புதன் திசை நடப்பதால், புதன்கிழமை, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளார்' என, பிரபல ஜோதிடர் திருக்கோவிலுார் பரணிதரன் தெரிவித்தார். இது குறித்து, அவர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தல், ஏப்., 23ல் நடக்க உள்ளது. அன்று, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் ஜாதகப்படி, அவரது ராசிக்கு பத்தாம் இடத்தில் குருவும், சந்திரனும் இணைந்து, குரு சந்திர யோகத்தை உண்டாக்குகின்றனர்.
அதேபோல், முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நேரத்தில், தேர்தல் நடக்கும் நாளன்று, கன்னி ராசிக்கு பத்தாம் இடத்தில் குருவும் சந்திரனும் இணைந்திருப்பதுபோல், நேற்று பத்தாம் இடத்தில் குருவும் சந்திரனும் இணைந்து, குரு சந்திர யோகத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
முதல் வேட்பாளர் பட்டியல் அறிவித்த நேரம் புதன் ஓரையாகும், முதல் வேட்பாளர் பட்டியலில், 23 வேட்பாளர்களை அறிவித்திருப்பதும், புதனுடைய ஆதிக்கம்தான். தற்போது பழனிசாமிக்கு நடந்து வருகின்ற திசை, புதன் திசை என்பதால், புதன் திசையில், புதன் ஓரையில், புதன் கிழமையில், புதனுக்குரிய எண்ணில், ஒரு வேலையை துவங்குகின்றபோது, அதில் வெற்றி உண்டாகும். அதனால், இந்த நாளை தேர்வு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement