Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 இப்படி பிரசாரம் செய்ய கமலுக்கு மனம் வந்தது எப்படி: வானதி

 இப்படி பிரசாரம் செய்ய கமலுக்கு மனம் வந்தது எப்படி: வானதி

கோவை: நிருபர்களிடம் கோவை வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதிசீனிவாசன் கூறியதாவது:

கோவை தெற்கு தொகுதி மக்களால் புறக்கணிக்கப்பட்டு படுதோல்வியை தழுவிய நடிகர் கமல், கரூர் கம்பெனி நடத்திய ஊழல், மோசடி செய்து சிறை சென்ற தெற்கு தொகுதி தி.மு.க.,வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, அவரது மனசாட்சி எப்படி இடம் கொடுத்தது.

தெற்கு தொகுதி மக்கள் எனக்கு அளித்த 50,000 ஓட்டுக்களை அப்படியே தற்போதைய தி.மு.க., வேட்பாளருக்கு அளியுங்கள் என்று கமல் கேட்கிறாரே, அது நியாயமா. தெற்கு தொகுதி மக்கள் கமலை நம்பியே ஓட்டு செலுத்தவில்லை.

அப்படியிருக்கும் சூழலில் நடிகர் கமல் பரிந்துரையின் பேரில் எப்படி ஊழல், மோசடி செய்து சிறை சென்ற கரூர்காரருக்கு ஓட்டுக்களை செலுத்துவார்கள்.

தெற்கு தொகுதி மக்கள் அவ்வளவு யோசனை இல்லாதவர்களா என்ன?

நன்கு சிந்தித்து ஓட்டளிப்பவர்கள் அவர்கள் ஒரு போதும், கமல் பரிந்துரை செய்யும், மோசடி செய்து சிறை சென்ற வேட்பாளருக்கு ஓட்டு போட மாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement