Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தஞ்சையை கேட்கவில்லை; முருகானந்தம் வாக்குமூலம்

 தஞ்சையை கேட்கவில்லை; முருகானந்தம் வாக்குமூலம்

தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில், மாநகர செயலர் சரவணன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கட்சி மேலிடத்தில் உறுதியாக கூறப்பட்டது. இதையடுத்து மக்கள் சந்திப்பு, பரிசுப்பொருள் வினியோகம் என, தேர்தல் பணியை சரவணன் தொடங்கினார்.

ஆனால், அத்தொகுதி பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டு மாநிலப் பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம் வேட்பாளரானார். இதனால், அ.தி.மு.க.,வினர் அதிருப்தி அடைந்தனர். பா.ஜ., தனது சொல்வாக்கை பயன்படுத்தி தொகுதியை பறித்து கொண்டதாக பரவலாக பேசப்பட்டது.

இதுகுறித்து, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முருகானந்தம் பேசியதாவது:

தஞ்சை தொகுதியில் போட்டியிட, சரவணன் முன்னேற்பாடு பணிகளில் இருந்தார். நான், பட்டுக்கோட்டை தொகுதியில் சுற்றுப்பயணத்தில் இருந்தேன். தஞ்சையை அ.தி.மு.க.,வுக்கு கொடுக்கக் கூடாது என அழுத்தம் கொடுத்து கேட்டு வாங்கவில்லை. ஒரு கூட்டணியில் பல கட்சிகள் சேரும் போது, எந்த மாதிரி மாற்றம் வேண்டுமானாலும் வரலாம். ஒன்றும் செய்ய முடியாது.

அந்த அடிப்படையில், நமக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதை பெருந்தன்மையாக ஏற்றுக்கொண்டு சரவணனும் பிரசாரத்திற்கு வருகிறார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

ஏப் 09, 2026 12:37 pm

இந்த மாதிரி எந்த சிறுத்தையும் , கதர்சட்டையும் வாக்குமூலம் கொடுக்கவில்லையா

Reply Rate this