நோட்டாவை நம்பி நொந்தேன்
பி.யோககேஷ், 21மதுரை
தே ர்தல் நேரம் என்பதால், மதுரை கிழக்கு தொகுதியில் ஐந்து ஆண்டுகளாக இருந்த பிரச்னைகள் அவசரகதியாக சரிசெய்யப்பட்டு வருகின்றன. மாறி மாறி வரும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியால் இளைஞர்களுக்கு எவ்வித பயனும் இல்லை. வெறும் லேப்டாப் கொடுத்து, இளைஞர்களின் ஓட்டுகளை அள்ளலாம் என, அரசியல்வாதிகள் நினைக்கின்றனர்.
'யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் குறையப்போவதில்லை' என கடந்த தேர்தலில் எதிர்ப்பை பதிவு செய்ய விரும்பி நோட்டாவிற்கு ஓட்டு செலுத்தினேன். பின்னர், ' நோட்டா'வால் ஆட்சிமாற்றத்தில் எவ்வித பயனும் இல்லை என்பதை அறிந்து நொந்து போனேன். எனவே இம்முறை வரிசையில் நின்று நோட்டாவிற்கு ஓட்டு போட்டு வீணாக்காமல், புதிய கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க நினைக்கிறேன்.
என் நண்பர்கள் விஜய் ரசிகர்கள் என்பதால், த.வெ.க.,விற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். நான், விஜயை நடிகர் என்பதைத் தாண்டி அரசியலில் மாற்று அணியாக தன்னை முன்னிறுத்தும் தலைவனாக பார்க்கிறேன். மறுபுறம் சீமானும் தற்சார்பு பொருளாதாரத்தை வலியுறுத்துகிறார். எனவே த.வெ.க., - நாம் தமிழர் போன்ற கட்சிகளில் ஒன்றிற்குதான் என் ஓட்டு.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்