நாட்டை தலைகீழாக மாற்றுவேன்: சீமான்
காரைக்குடி: வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், நாட்டையே தலைகீழாக மாற்றி விடுகிறேன் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீமான் ஓட்டு சேகரித்து பேசியதாவது: கட்சியை நடத்துவதற்கு எங்கிருந்து காசு வருகிறது என கேட்கின்றனர். அனைவரும் போட்டி போடுகிறீர்கள். ஆனால், காசு இல்லை என்கிறீர்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் யாரும் பணக்காரன் கிடையாது.
எனது மக்கள் கொடுக்கின்றனர். மக்கள் இயக்கத்துக்கு மக்கள் தான் தர வேண்டும். மக்களிடம் திரள் நிதி கேட்கிறேன். ரூ.200, 300, 2000, 4000 கொடுக்கின்றனர். அதில் தான் பேசி கொண்டுள்ளேன். அந்த பணத்தில் மைக், வாகனமும் அதில் வாங்கியது தான். நான் என் மக்களிடம் இருந்து மக்களுக்காக வந்தேன்.
நான் மக்களுக்காக வெயிலில் காய்கிறேன். இதை விட மே மாதத்தில் ஆடு, மாடுகளுக்காக வெயிலில் காய்ந்தவன் தான். அதெல்லாம் புதியது அல்ல.உங்களிடம் இருந்து உங்களுக்காக வந்த பிள்ளைகள். அதனால், உங்களை ஏமாற தயாராக இல்லை.
இந்த காரைக்குடியில் தொகுதியில் நான் வெற்றி பெற்றால், இந்த தொகுதிக்கு அரசு, நிதி ஒதுக்கி பணி செய்ய வைக்கிறதோ இல்லையா, ஆனால், உலகம் முழுவதும் உள்ள 13 கோடி தமிழ் மக்கள் பணம் தருவார்கள். சிதம்பரம் இந்த தொகுதியில் எத்தனை முறை வெற்றி பெற்று மத்திய அமைச்சர் ஆகியுள்ளார் என்று.யாருக்காவது காரைக்குடி தெரியுமா?நான் இன்றும் வெற்றி பெறவில்லை.இப்போது தான் நிற்கிறேன். ஆனால், உலகத்தில்காரைக்குடி தெரியாத நபர் யாராவது இருக்கிறாரா
உலகமே ஒரே ஒரு தொகுதியை குறிவைத்துள்ளது. ஒரு தொகுதியில் ஒருவரின் வெற்றிக்காக காத்திருக்கிறது. உனது மகனின் வெற்றிக்காக. 15 ஆண்டுகளாக முச்சத்தியில் வீதியில், மக்கள் போராட்டத்தில் பிரச்னைக்காக நின்று பேசி உள்ளேன். சட்டசபையில் பேச வேண்டும். அரசு எனக்கு என்ன காசு தருகிறது. நான் வெற்றி பெற்றால், ஆட்சி அமைத்தால் நாட்டை தலைகீழாக மாற்றி விடுகிறேன். வேறு நாடு. இந்த அரசு எனக்கு காசு தர வேண்டியது இல்லை. எனது மக்கள் எனக்கு தருவார்கள்.
எனது குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, மருத்துவம், நல்ல வாழ்க்கை, பசி பஞ்சம் இல்லாத வாழ்க்கை. இதற்காக வெற்றி பெற்று நாட்டை கைப்பற்ற வேண்டும். மீண்டும், உதயசூரியன், கை, இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டால், எந்த சாமியிடமும் பரிகாரமும், மன்னிப்பும் இல்லை. எனது பாவமும் இருக்கிறது. இவ்வாறு சீமான் பேசினார்.
Advertisement
எந்த நாட்டை சொல்கிறார்? தமிழ் நாட்டையா? தமிழ் நாடுதான் ஏற்கனவே திமுக ஆட்சியில் தலைகீழாக இருக்குதே. போதாக்குறைக்கு டாஸ்மாக் சரக்கு அடித்துவிட்டு குடிமக்கள் தலை எங்கே, கால் எங்கே என்று தெரியாமல் வீதிகளில் படுத்துக்கிடக்கிறார்களே...
எல்லாத்தையும் தலைகீழாக மாற்றி என்ன புன்னியம் அப்பறம் எல்லாருமே தலைகீழா போகணும் ..அப்படி எதுவமே வேண்டாம் ..
தமிழகம் ஊழலாலும், போதைப் பொருட்களாலும் சீரழிக்கப்பட்டு கிடக்கிறது. ஓட்டுக்கு நோட்டு, குவார்ட்டர், கோழி பிரியாணி வழங்கி ஆட்சி அதிகாரத்திற்கு வரும் கூட்டம், பகல் கொள்ளையில் ஈடுபடுகிறது. இதில் தங்களைப் போன்றவர்கள் என்ன கூப்பாடு போட்டாலும், இலவசத்தில் மூழ்கி உள்ள தமிழன் காதில் அது விழப் போவதில்லை.
நாட்டை தலைகீழாக மாற்றுவேன்னா ஒருவேளை கன்னியாகுமரி விவேகானந்தா பாறை பக்கத்தில காஷ்மீர் டால் ஏரியை கொண்டு வந்திருவாரோ?
குடிகாரபோதை கஞ்சா தமிழ்நாடு தலகீழாதான் இருக்குது. இவன் வேற காமடி பண்ணிகிட்டு. ஓஸ்ஸிக்கு அடிமையான தமிழன் உனக்கு ஓட்டு போடுவானா வாய்ப்பில்ல ராசா
தயவு செய்து இவரை நல்ல மன நல மருத்துவரிடம் காண்பித்து இரும்பு சங்கிலியால் கட்டி கூண்டினில் அடைக்கவும். தேர்தல் முடியும் வரை தொகுதிக்குள் விட வேண்டாம், இல்லையென்றால் சாலையில் விமானம் விடுவேன், ஆகாயத்தில் ரயில், பஸ் விடுவேன் என்று சொல்லி மக்களை அரை பைத்தியம் ஆக்கி விடுவார். எப்படி 233 தொகுதியில் இவரது தேர்தல் வேட்பாளர்கள் சகித்துக்கொள்கிறார்கள். ஓம் சாந்தி.

சைமன் என்ன அப்புடி பேசிப்புட்டீக. தலை கீழா இருப்பதை நேராக மாற்றுவேன் அப்புடிதானே பேசணும்?