இது த.வெ.க., ஆட்சியா இல்லை தி.மு.க., ஆட்சியா?: சீமான் கேள்வி
சென்னை: 'நடப்பது த.வெ.க., ஆட்சியா அல்லது தி.மு.க., ஆட்சியா' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நா.த.க.,வின் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலருமான ஹாஜா முகைதீன், அவரது வீட்டின் வாசலிலேயே போதை கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருட்களின் விற்பனைக்கு எதிராக நிற்கும் ஒரு செய்தியாளருக்கே, இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வன்முறை தாக்குதல் தொடுக்கப்படுகிறது. அப்படியென்றால், எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்.
நாள்தோறும் போதை கும்பலின் அட்டூழியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தி.மு.க., ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள் தான் தொடரும் என்றால், நடப்பது த.வெ.க., ஆட்சியா இல்லை தி.மு.க., ஆட்சியா; இதுதான் மாற்று அரசியலா?
முதல்வராக பதவி ஏற்றதும், 'போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு' என்று கையெழுத்திட்டாரே விஜய், அந்த படை என்ன செய்கிறது? இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Advertisement
தேர்தலுக்கு முன்பு எங்க அண்ணா வந்தா ஒரே நாளில் எல்லாம் மாறி விடும். எல்லாம் இலவசமும் சொந்த காசில் தரப்படும் ன்னு ஜல்லி அடித்து விட்டு இப்போ 10 லட்சம் கோடி கடன் எல்லாம் ஒரு நாளில் எப்படி மாறும் ன்னு எதிர் கேள்வி. இல்லை என்றால் நீ தீய முக ன்னு முத்திரை. முதலில் எதார்த்தம் க்கு வாருங்கள். தனி மனிதன் மாறாத வரைக்கும் எதுவும் சாத்தியம் இல்லை. இனியாவது அத்தியாவசியம் குறித்து யாரேனும் கேள்வி கேட்டால் சரியாக நடவடிக்கை எடுங்க பதில் கொடுங்க. உங்க அண்ணா ன்னு கேள்வி கேட்டவணை கேலி செய்தால் உங்களுக்கு ம் போன ஆட்சி க்கும் வித்தியாசம் இல்லை
போதை கூட்டங்கள் யார் ஆட்சிக்கு வந்தால தங்கள் வணிகத்தைத் தொடரும். அதிகாரிகள் விழிப்புடன் இருந்தால் கட்டுப்படுத்தலாம் பத்திரிக்கையாளர் மற்றும் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
திருட்டுதிரவிடம்... போன ஆட்சியில் வாயில எண்ணத்தை வயித்திருந்தேங்க?. கொஞ்சம் காலாஅவகாசம் வேண்டாமா?.
திருட்டுதிரவிடம்... போன ஆட்சியில் வாயில எண்ணத்தை வயித்திருந்தேங்க?. கொஞ்சம் கால அவகாசம் வேண்டாமா?.
பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் தீய செயல்களுக்கு 10 நாட்களில் தீர்வு காண முடியுமா? சீமான் முதல்வர் ஆனால் முடியுமா?
yes it looks very much like a replica of dmk.periyar dravidam are in the forefront. Two language formula no pm Sri schools no navodaya schools.Already dmk claims their rule continues.
உமக்கு எதரற்கய்ய சந்தேகம்? ஸ்டாலின் ஒப்புதல் வாக்கியம் கொடுத்த பின். திமுகவின் B டீம் தான் தா வெக. ஓட்டு போட்டவன் வெட்கி தலை கவிழ்ந்து நடக்கணும். ஒருத்தர் என்னாடா என்றால் சனாதனைத்தை சட்ட சபையில் போசுறார். இன்னோருத்தர் , வேறு மதத்துகாரன் எப்படி அடுத்த மதத்தை பற்றி பேசலாம் இதைய கண்டித்திருக்க வேண்டிய முதல்வர் பதவியில் இருப்பது மௌனம் காப்பது ஒப்புதல் வாக்கியம் கொடுப்பதற்கு சமம். ஏமாந்த சோனகிரியன் இந்துக்கள் என்று மறுபடியும் நிரூபித்திருக்கிறார்கள்.
காவல் துறையை கையில் வைத்துள்ள விஜய் இதை போன்ற கிரிமினல் குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும். திராவிட மாடல் ஆட்சியில் நடந்த அதே கொலை, கொள்ளை, பெண்கள் பாலின தொல்லை போன்றவைகள் அன்றாட நிகழ்வுகள் ஆகி விட்டால் தமிழக மக்கள் இவர்கள் ஆட்சியை தூக்கி ஏறிய போராடுவோம்.

பரவாயில்ல்யே தவெக பிரமுகர்களூம், அநுதாபிகளும் தீயசக்தி திமுகவின் நடைமுறைகளை அப்படியே ஃபாலோ செய்கிறார்களே தவெக மீது விமரிசனமே செய்யக்கூடாது என போட்டுத்தாக்குகிறார்களே முக்கியமாக திமுக காலத்தில் அதிகம் பேசாத அமைதி மார்க்கத்தினரும், கட்சியும் சரி சரி திமுக விற்கும் த வெக விற்கும் அதிக வித்யாசம் இல்லை ஒப்புக் கொள்கிறோம்