கரூர் 'எலி'க்கு கோவையில் 'பொறி' அண்ணாமலை பிரசாரத்தில் 'தெறி'
கோவை: ''சட்ட சபை தேர்தலில் தி.மு.க.,வின் முதல் தோல்வி கோவை தெற்கில் ஆரம்பித்து கோவை வடக்கு என சேப்பாக்கம் வரை செல்லும்,'' என, பா.ஜ., அண்ணாமலை பேசினார்.
கோவை வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து கண்ணப்ப நகரில் பா.ஜ., அண்ணாமலைபேசியதாவது:
தி.மு.க., ஆட்சியை துாக்கி எறிய மக்கள் காத்திருக்கின்றனர். தமிழகம் முழுவதும் தே.ஜ., கூட்டணியின் அலை வீசுகிறது. தி.மு.க., ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 8,008 படுகொலைகள், 2,080 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 18 ஆயிரம் 'போக்சோ' வழக்குகள் பதிவாகியுள்ளன.
பெண்களுக்கு எதிரான ஆட்சி நடந்துகொண்டிருக்க, இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாக ஸ்டாலின் கூறிக்கொண்டிருந்தார். அந்த இரும்புக்கரம் துருப்பிடித்து நிற்கிறது.செந்தில் பாலாஜி என்ற 'எலி' கோவை பொறியில் மாட்டியுள்ளது.
நாட்டில் 1977க்கு பின், ஒரு கட்சி தனித்தன்மையுடன் ஆறு முறைக்கு மேல் ஆட்சி அமைத்துள்ளது என்றால், அது அ.தி.மு.க.,தான்.இது, அ.தி.மு.க.,வின் கோட்டை. தே.ஜ., கூட்டணி பத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
தி.மு.க.,வின் ஊழல் பட்டியல் காங்., கட்சியிடம் உள்ளது. அதனால் காங்., பற்றி தி.மு.க.,வினர் பேச மாட்டார்கள். பாஜ., - அ.தி.மு.க., ஆகிய இரண்டுமே எளிமையான கட்சி. சாமானிய மனிதர்களும் தலைவர் பொறுப்புக்கு வரலாம் என்பது, தே.ஜ., கூட்டணியின் அடிப்படை தத்துவம்.
கருணாநிதி முதல்வரானவுடன், நாடு முழுவதும் சுரண்டி அவரது குடும்பத்துக்கு நான்காவது தலைமுறைக்கும் தேவையான சொத்துக்களை சேர்ந்துள்ளார். அண்ணா என்கிற வார்த்தையை தி.மு.க., கட்சியினர் பயன்படுத்தவே கூடாது.
எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, செந்தில் பாலாஜியை தமிழ்நாட்டின் ஊழல்பேர்வழி என்றார். இன்று, அருமை சகோதரர் என்கிறார்; காரணம் பெட்டி மாறியுள்ளது. தி.மு.க., வேட்பாளர்கள் 'டெபாசிட்'கூட இங்கு வாங்கக்கூடாது.
இவ்வாறு, அவர் பேசினார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்