அ.தி.மு.க., ஆட்சி அமைத்தவுடன் பெண்களுக்கு திருமண உதவித்தொகை
விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் விஜயா சுரேஷ்பாபு, ஓட்டு சேகரித்தார்.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பூந்தோட்டம், அண்ணா நகர், ரங்கநாதன் ரோடு. முத்தமிழ் நகர், சுதாகர் நகர், சந்தான கோபாலபுரம், நரசிங்கபுரம், அக்ரஹார தெரு, திருவள்ளுவர் தெரு, துரைசாமி லே-அவுட், ஆசா குளம், வாரியார் தோட்டம், சாலாமேடு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று வேட்பாளர் ஓட்டு சேகரித்தபோது பேசுகையில், 'தமிழகத்தில் மிகச்சிறந்த ஆட்சியை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அளித்தார். அவரது வழியில் முன்னாள் முதல்வர் - ஜெ., தலைமையில் வளமான தமிழகம் உருவானது.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடைந்தது. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, தொடர்ந்து நல்லாட்சி வழங்கினார்.
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்படும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு லேப்டாப், மானிய விலையில் ஸ்கூட்டி, திருமண உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்' என்றார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்