Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க., ஆறு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, நான்கு தொகுதிகளில் வென்றது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், திருச்சி தொகுதியில், ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை, தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சொந்த சின்னம்

வரும் தேர்தலில் தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டால், ம.தி.மு.க.,வுக்கு நான்கு தொகுதிகள், சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால், இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என, தி.மு.க., தெரிவித்தது.
கடந்த தேர்தலில் கொடுத்த தொகுதிகளை தர மறுப்பதுடன், ராஜ்யசபா சீட்டும் தராததால், வைகோ அதிருப்தி அடைந்தார். அவரது மகன் துரையின் ஆதரவாளர்கள், 'தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்' என, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தி.மு.க., தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
கூட்டணி பேச்சு, தொகுதிகள் எண்ணிக்கை போன்ற விவகாரங்கள் குறித்து சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர உயர்நிலை கூட்டம் நடந்தது. இதன் பிறகு வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள், திமுக தலைமை அலுவலகம் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தனர்
இதனைத் தொடர்ந்து மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
வைகோ கூறுகையில், ''நான்கு தொகுதிகள் கிடைத்தது மகிழ்ச்சி. கட்சியின் பதிவை தக்க வைக்க ஒரு தொகுதியில் மட்டும் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறோம். மற்ற மூன்று தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிடுவோம்,'' என்றார்.

@twitter@https://x.com/dinamalarweb/status/2031738409455411589?s=20 @@twitter@@

அந்த 4 தொகுதிக்கு நன்றி!

தமிழக சட்டசபை தேர்தல்களில் மதிமுக போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை
1996 - 177 (தனி அணி)
2001 - 211 (தனி அணி)
2006 - 35 (அதிமுக கூட்டணி)
2011 - தேர்தல் புறக்கணிப்பு
2016 - 28 (மக்கள் நலக்கூட்டணி)
2021 - 6 (திமுக கூட்டணி)
2026 - 4 (திமுக கூட்டணி)

Advertisement