Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 மேலுார் தொகுதி காங்., வேட்பாளர்; எடுபடாத கார்த்தி எம்.பி., சிபாரிசு

 மேலுார் தொகுதி காங்., வேட்பாளர்; எடுபடாத கார்த்தி எம்.பி., சிபாரிசு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- நமது நிருபர் -

மேலுார் தொகுதி வேட்பாளராக, அகில இந்திய காங்கிரஸ் செயலரும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க., கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இவற்றில், மேலுார் தொகுதி வேட்பாளரை முடிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நான்கைந்து பேரை மாற்றக்கோரியும், சில தொகுதிகளில் காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், 'பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் எட்டு வேட்பா ளர்களை அறிவித்திருக்க வேண்டும். ஆனால், இருவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, மேலுார் தொகுதியை, மகளிர் காங்கிரஸ் நிர்வாகி ஹசீனா சையதுக்கு ஒதுக்க வேண்டும்' என கார்த்தி எம்.பி., வலியுறுத்தி வந்தார்.

அகில இந்திய காங்கிரஸ் செயலர் விஸ்வநாதனும் பொது தொகுதியான மேலுாரில் போட்டியிட, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த தனக்கு வாய்ப்பு வழங்குமாறு காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் வலியுறுத்தினார்.

பொ து தொகுதியில் தலித் வேட்பாளரை போட்டியிட வாய்ப்பு வழங்கினால், அனைத்து கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்றும், கார்கேவிடம் வலியுறுத்தப்பட்டது.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும், விஸ்வநாதன் பெயரை ராகுலிடம் பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில், மேலுார் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக விஸ்வநாதனை அறிவித்துள்ளனர்.

Advertisement