Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தே.ஜ., கூட்டணி; மகிழ்ச்சி கூட்டணி: பியூஷ் கோயல்!

 தே.ஜ., கூட்டணி; மகிழ்ச்சி கூட்டணி: பியூஷ் கோயல்!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: தமிழகத்தில், தே.ஜ., கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக, சென்னை வந்திருந்தார் மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல். எல்லாம் சுமுகமாக முடிந்து டில்லி திரும்பினார். பின், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற கோயல், பிரதமர் மோடியிடம், 'தமிழகத்தில் நம் கூட்டணி தொகுதி பங்கீடு நல்லபடியாக முடிந்தது' என்றாராம். 'சபாஷ்' என, மகிழ்ச்சியோடு வாழ்த்தினாராம் பிரதமர்.

தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் இந்த விஷயத்தை கூறினாராம் கோயல். பா.ஜ.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்தும், அங்குள்ள நிறை, குறை குறித்தும் அமித் ஷா கேட்டுள்ளார்.

இதையடுத்து, பழனிசாமிக்கு போன் போட்டு, அவரை அமித் ஷாவுடன் பேச வைத்துள்ளார் கோயல். அத்துடன், தே.ஜ., கூட்டணியின் மற்ற தலைவர்களுடனும் போனில் பேசியுள்ளார் அமித் ஷா.

'பழனிசாமி, எப்போதும் சிரித்த முகத்துடனே காணப்படுகிறார். எனவே, நம் கூட்டணி சிரித்தபடியே இருக்கும் கூட்டணி. ஆனால், தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள், அழுதபடியே இருக்கின்றன. காரணம், குறைவான தொகுதிகள் ஒதுக்கீடு தவிர, கேட்ட தொகுதிகள் கிடைக்கவில் லை. எனவே, அது அழும் கூட்டணி' என கிண்டலடித்தாராம் அமித் ஷா.

'அழுது கொண்டே சிரிக்கிறோம்' என ஒரு பக்கம், ம.தி.மு.க.,வினர் சொல்கின்றனர். இன்னொரு பக்கம், காங்., - எம்.பி., ஜோதிமணி, 'தமிழகத்தில் காங்., உருப்படாது. கட்சியை, சில தலைவர்கள் அடகு வைத்து விட்டனர்' என்கிறார். அவர் குறிப்பிடுவது, சிதம்பரத்தை தான். அவர் தான் நடுவில் புகுந்து, ராகுலுக்கு எதிராக வேலை செய்துள்ளார் என, டில்லி அரசியல் வட்டாரங்களில் தமிழக அரசியல் குறித்து அலசப்படுகிறது.

Advertisement