Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஓ.பி.எஸ்.,க்கு கிடைக்கப்போவது என்ன; அதிமுகவினர் ஆர்வம்

 ஓ.பி.எஸ்.,க்கு கிடைக்கப்போவது என்ன; அதிமுகவினர் ஆர்வம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது நிருபர்

சில நாட்களுக்கு முன், பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, 'தி.மு.க., கூட்டணியில் அ.தி.மு., தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்துக்கு சீட் வேண்டும்' என கேட்டார். 'அதெல்லாம் வேண்டாம்; நீங்கள் தி.மு.க.,வில் இணைந்து கொள்ளுங்கள்.

உங்களை கட்சி மரியாதையாக நடத்தும். உங்களோடு சேர்த்து இருவருக்கு சீட் வழங்கப்படும். அடுத்து தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்பட்சத்தில், நீங்கள் தான் சபாநாயகராக இருக்க வேண்டும்' என கூறியுள்ளார். இந்த விஷயம் அரசல் புரசலாக, அ.தி.மு.க., தலைமையையும் எட்டியுள்ளது. இது உண்மையா, ஸ்டாலின் அப்படி சொன்னாரா என்பதை அறிந்து கொள்ளுமு் முயற்சியில் அதிமுக நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement