Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


எங்கள் வேட்பாளர்களை மிரட்டுறாங்க; பாதுகாப்பு கொடுங்க என்கிறார் ராமதாஸ்

எங்கள் வேட்பாளர்களை மிரட்டுறாங்க; பாதுகாப்பு கொடுங்க என்கிறார் ராமதாஸ்

சென்னை: 'நான் அறிவித்த வேட்பாளர்களுக்கு, தேர்தல் கமிஷன் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதியில், முரளிசங்கரை வேட்பாளராக அறிவித்துள்ளேன். அவர், கூட்டணி கட்சி தலைவர்களையும், முக்கிய பிரமுகர்களையும் சந்திக்க, நேற்று முன்தினம் காலை சென்றுள்ளார். அப்போது, முரளிசங்கரை பின் தொடர்ந்த 30க்கும் மேற்பட்ட நபர்கள், அவரை வழிமறித்து, கையைப் பிடித்து காரிலிருந்து கீழே இறக்கி, அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

மேலும், 'இனி தொகுதிக்குள் வந்தால் வெட்டி கொலை செய்து விடுவோம்' என மிரட்டியுள்ளனர். பா.ம.க.,வை அபகரிக்கும் நோக்கத்தில், இந்த தேர்தலை பயன்படுத்துபவர்கள், உண்மையான பா.ம.க., தொண்டர்கள் எங்கள் பக்கம் இருப்பதால், தோல்வி பயம் தரும் ஆத்திரத்தில், நான் அறிவித்த வேட்பாளரை மிரட்டியுள்ளனர்.

தமிழகம் முழுக்க, எங்கள் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அநாகரிகமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பதிவிடுகின்றனர். எங்கள் தேர்தல் பணிகளை முடக்க சதி திட்டம் தீட்டியுள்ளனர். எனவே, எங்கள் வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் கமிஷனும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement