Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பன்னீர்செல்வம் இணைந்தது எங்களுக்கு கூடுதல் வலிமை

 பன்னீர்செல்வம் இணைந்தது எங்களுக்கு கூடுதல் வலிமை

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க., வில் இணைந்ததன் வாயிலாக, தி.மு.க., தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கூடுதல் வலிமை சேர்ந்திருக்கிறது. அ.தி.மு.க.,வை ஒருங்கிணைத்து பழனிசாமியுடன் இணைந்து பணியாற்றும் முயற்சியை பன்னீர்செல்வம் மேற்கொண்டார். அது நிறைவேறாததால், பா.ஜ.,வில் சேராமல், தி.மு.க.,வில் சேர்ந்தது, அவர் மீதான நன்மதிப்பை மேலும் உயர செய்திருக்கிறது.

பிரதமர் மோடி, தான் செல்லும் அனைத்து மாநிலங்களிலும், ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், அவர், திருப்பரங்குன்றம் முருகனை தரிசிப்பது மகிழ்ச்சி. ஆனால், பா.ஜ., அரசியல் கணக்குகளில், இதுவும் ஒன்று என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், தமிழக மக்கள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும் மதவெறி அரசியலுக்கு இடம் தர மாட்டார்கள்.

- திருமாவளவன்

தலைவர், விடுதலை சிறுத்தைகள்

Advertisement