அமோக ஓட்டு வித்தியாசத்தில் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி
சென்னை: அமோக ஓட்டு வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என வேட்புமனு தாக்கல் செய்த பிறகு நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை கொளத்துார் தொகுதியில் போட்டியிடுவதற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பிறகு நிருபர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: 4வது முறையும் கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் என்னை அமோக ஓட்டு வித்தியாசத்தில் மக்கள் என்னை வெற்றி பெற வைப்பார்கள் என்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன். எப்போதும் போல பிரசாரம் வலுவாக இருக்கும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தமிழகம் போராடுகிறது!
மேலும் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: டில்லியை எதிர்த்து தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது. கொளத்தூரில் இதுவரை இல்லாத அளவு ஆதரவு இருப்பதை பார்க்கிறேன். தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு கிடைக்கும் ஆதரவை பார்த்தால் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்றார்.
உற்சாக வரவேற்பு
வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு திறந்த வெளி ஜீப்பில் சென்று முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் ஓட்டு சேகரித்தார். அவருக்கு கொளத்தூர் தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தனது 5 ஆண்டு கால ஆட்சியில் செய்த சாதனையை எடுத்துரைக்கும் புத்தகத்தை மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
கொளத்தூர் தொகுதி மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் ஓட்டு சேகரித்தார். தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
Advertisement

வாசகர்கள் கருத்துகள்