Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஜனநாயகம் மீதான பாசிச தாக்குதல்: பிரசார அனுமதி மறுப்புக்கு விஜய் கண்டனம்

ஜனநாயகம் மீதான  பாசிச தாக்குதல்: பிரசார அனுமதி மறுப்புக்கு விஜய் கண்டனம்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: பெரம்பூரில் நாளை த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். மாற்று இடம் கேட்டு விண்ணப்பிக்கும்படி தெரிவித்துள்ளனர். இது ஜனநாயகம் மீது நடத்தப்பட்ட பாசிச தாக்குதல் என விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
த.வெ.க., தலைவர் விஜய், சில மாதங்களுக்கு முன்பு வரை, பல்வேறு மாவட்டங்களில் சனிக்கிழமை தோறும் பிரசாரம் மேற்கொண்டார். கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் உயிர் பலி சம்பவத்துக்கு பின், அந்த பயண திட்டம் ரத்தானது. கட்சி நிர்வாகிகள் சந்திப்புகளை மட்டும் பல்வேறு நகரங்களில் மேற்கொண்டார். தற்போது, தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில், விஜய் போட்டியட உளளார்.

இதையடுத்து, தன் தேர்தல் பிரசாரத்தை நாளை சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு, பெரம்பூரில், விஜய் துவக்க திட்டமிட்டு இருந்தார். இதற்கு அனுமதி கேட்டு போலீசிடம் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது.

மறுப்பு

இந்நிலையில், விஜய் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி தராமல் மறுத்துள்ளனர். த.வெ.க., அனுமதி கேட்ட எம்கேபி நகர் பகுதியில் 3 ஆயிரம் பேர் கூட முடியாது. சிறிய இடம் என்பதால் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனக்கூறி போலீசார், மாற்று இடத்தில் பிரசாரம் நடத்த அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்படி தெரிவித்துள்ளனர்.

வெட்கமாக இல்லையா

இது தொடர்பாக விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தவெக சார்பில் திட்டமிடப்பட்ட பிரசாரத்துக்கு சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும். நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே மார்ச் 26 ல் சென்னை பெரம்பூர் சட்டசபைத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.
ஆனால், நம்முடைய தேர்தல் பிரசார நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??
இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் தவெகவிற்கு எதிராகச் செயல்படும் திமுக காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், திமுக அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.
@twitter@https://x.com/TVKVijayHQ/status/2037503169027358987 @@twitter@@

மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்" என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும். தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு திமுக எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டசபைத் தேர்தலில் ஜனநாயக விரோதத் திமுக ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி! இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.

Advertisement