Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஏப்ரல் 13ல் பா.ஜ.,வினருடன் ஆன்லைனில் உரையாடுகிறார் மோடி

ஏப்ரல் 13ல் பா.ஜ.,வினருடன் ஆன்லைனில் உரையாடுகிறார் மோடி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள, தமிழக பா.ஜ., தொண்டர்களை உற்சாகப்படுத்த, 'எனது பூத் வலிமையான பூத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி, வரும் 13ம் தேதி, 'ஆன்லைனில்' உரையாடுகிறார்.

ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட பா.ஜ., பொறுப்பாளர்களுடன் இணைந்து, வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, மத்திய பா.ஜ., அரசின் திட்டங்கள் பற்றி விளக்கி கூறுமாறு, தமிழக பா.ஜ., நிர்வாகிகளை, பிரதமர் நரேந்திர மோடி, ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பா.ஜ., தொண்டர்களை உற்சாகப்படுத்த, 'எனது பூத் வலிமையான பூத்' என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி வாயிலாக, 'நமோ' செயலியில் வரும், 13ம் தேதி காலை, 11:00 மணிக்கு, பிரதமர் மோடி உரையாட உள்ளார். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும், மோடியுடன் உரையாடும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

Advertisement

ஏப் 10, 2026 05:33 pm

அவரே கேள்வி. அவரே பதில்.

Reply Rate this
எதுக்கும் உதவாத அப்பாவி
ஏப் 10, 2026 05:52 pm
Rate this