Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


இதற்கு முன் தோல்வியடைந்த முதல்வர்கள்....

இதற்கு முன் தோல்வியடைந்த முதல்வர்கள்....
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது நிருபர்

தமிழகத்தில் முதல்வராக இருந்து, அடுத்த வந்த தேர்தலில்களில் தோல்வியடைந்தவர்கள்:
* காமராஜர்
1954 - 1963 என தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த காமராஜர் (காங்.,) 1967 தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தி.மு.க, வின் சீனிவாசனிடம் 1,285 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி.
* பக்தவச்சலம்
1963 - 1967ல் முதல்வராக இருந்த பக்தவச்சலம் (காங்.,), 1967ல் ஸ்ரீபெரும்புதுாரில் தி.மு.க., வின் ராஜரத்தினத்திடம் 8,926 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி.
* ஜானகி ராமச்சந்திரன்
1988ல் 23 நாட்கள் முதல்வராக இருந்த ஜானகி ராமச்சந்திரன்(அ.தி.மு.க.,) 1989 தேர்தலில் ஆண்டிபட்டியில் தி.மு.க.,வின் ஆசியனிடம் 4221 ஓட்டுகளில் தோல்வி.
* ஜெயலலிதா
1991 - 1996ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, 1996 தேர்தலில் பர்கூரில் தி.மு.க., வின் சுகவனத்திடம் 8,366 ஓட்டுகளில் தோல்வி.
* பன்னீர்செல்வம்
மூன்று முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், 2024 லோக்சபா தேர்தலில் ராமநாதபுரத்தில் முஸ்லீம் லீக் நவாஸ் கனியிடம் 1,66,785 ஓட்டுகளில் தோல்வி.
* ஸ்டாலின்
2021 - 2026ல் முதல்வராக இருந்த ஸ்டாலின், 2026 தேர்தலில் கொளத்துாரில் த.வெ.க.,வின் வி.எஸ்.பாபுவிடம் 9,116 ஓட்டுகளில் தோல்வி அடைந்தார்.

Advertisement