Advertisement
கேள்வி மேல் கேள்வி 1. இலை கட்சித் தலைவர் ஒவ்வொரு நாளும் பிரசாரம் முடித்து திரும்பியதும், தான் பிரசாரத்துக்கு சென்ற இடங்களில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு போன் போட்டு பேசுகிறாராம். 'என் பிரசாரத்துக்கு மக்கள் மத்தியில் என்ன ரியாக்ஷன்? நான் பேசியதெல்லாம் மக்களிடம் சென்றடைந்ததா? வேறு எதுவும் புதிதாக, சேர்த்து பேச வேண்டுமா? அப்படி ஏதும் பேச வேண்டும் என்றால் என்ன பேச வேண்டும்?' என்றெல்லாம் வரிசையாக கேள்வி மேல் கேள்வி கேட்டு பதில் பெறுகிறாராம்.
வியூக டீம் யோசனை 2. 'வழக்கமான தேர்தல் பிரசாரம் போர் அடிக்கிறது. பிரசாரம் செய்ய ஏதேனும் புதிய முறை இருந்தால் சொல்லுங்கள்' என, கட்சியின் மூத்த தலைவர்களிடம் யோசனை கேட்டாராம் சூரிய கட்சித் தலைவர். 'வியூக வகுப்பு டீமிடம் கேளுங்க தலைவரே... நல்ல யோசனை வரலாம்' என தலைவர்கள் சொல்ல, அதன்படியே யோசனை கேட்கப்பட்டதாம். அப்படி கிடைத்த யோசனை படிதான், மெட்ரோ ரயிலில் பயணம் செய்து, சூரிய கட்சித் தலைவர் பிரசாரம் மேற்கொண்டாராம்.
தயங்கும் தலைகள் 3. தாமரை கட்சியில் ஆறு முறைக்கும் மேல் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த தெற்கத்திய பெண்மணி, இம்முறையும் சென்னையில் போட்டியிடுகிறார். அவருக்கு இம்முறை சீட் கொடுத்ததில், கட்சியின் மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை யாருக்குமே பிடிக்கவில்லையாம். அதனால், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் அவருக்காக பிரசாரத்துக்கு செல்ல தயங்குகின்றனராம். இசையான அந்த பெண்மணி வேண்டி கேட்ட பிறகும் தலைவர்கள் புறக்கணிக்கின்றனராம்.
துாய்மை பணி 4. விசில் கட்சித் தலைவர் போகும் இடமெல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் குஷியான தலைவர், கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களை அழைத்துப் பேசியுள்ளார். அப்போது, 'நாம எப்படியும் ஆட்சிக்கு வந்துடுவோம். ஆனால், கட்சியின் பிரசாரத்துக்கு வரும் கூட்டத்தினர், ஏராளமாக குப்பை போட்டுச் செல்கின்றனர்; இது சரியில்லை. கூட்டம் முடிந்ததும், அதை அப்புறப்படுத்தணும்' என உத்தரவிட, அதன்படியே ஊரை கூட்டி துாய்மை செய்கின்றனராம்.
காக்கிகளுக்குள் மோதல் 5. தேர்தல் கமிஷன் உத்தரவை அடுத்து, காவல் துறையின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராயானவர், புதிய தலைமை செயலரை சந்திக்கப் போனாராம். அப்போது, காவல் துறையின் ஆசிர்வாத உயர் அதிகாரி அங்கிருந்திருக்கிறார். அப்போது, இரு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. 'தேர்தலுக்கு சூரிய கட்சிக்கு நீ எப்படி உதவுகிறாய் என பார்க்கிறேன்' என்று ராயானவர் சொல்ல, 'உங்களால் முடிந்ததை பாருங்கள்' என ஆசிர்வாத அதிகாரி கொந்தளித்தாராம்.
நீங்களே தட்டி விடுங்க 6. 'விசில் கட்சித் தலைவர் தங்களுடைய கூட்டணிக்கு வரவில்லை என்றால் என்ன, தல நடிகரையும் ரசிகர்களையும் எப்படியாவது தங்கள் பக்கம் திருப்புங்கள். அவரோடு பேசி சம்மதிக்க வைப்பதெல்லாம் இயலாத காரியம். நீங்களாகவே அவருடைய ஆதரவு இருப்பது போல, நாலா பக்கமும் செய்திகளை பரப்பி விடுங்கள். தல ஆதரவு நமக்கு இருப்பது போல தெரிந்தாலே, அவருடைய ஆதரவாளர்கள் நமக்கு ஓட்டு போடுவார்' என, இலை கட்சி தலைவர் உத்தரவிட, அதன்படியே செய்தி பரப்பப்படுகிறதாம்.
சூ ரசம்ஹார தொகுதியை ரொம்பவும் மல்லுக்கட்டி இலை கட்சியிடம் இருந்து பெற்றது தாமரை கட்சி. அக்கட்சியின்
என்ன பரிகாரம்?1. 'மயிலாப்பூர் தொகுதியில் இருந்து ஏன் பிரசாரத்தை தொடங்குகிறீர்கள். இப்படி
- நமது நிருபர் - இந்த தேர்தல், பொதுவான பேசுபொருளே இல்லாத, 'போர்' அடிக்கும் தேர்தலாக இருக்கிறது என்ற எண்ணம்
Dhurandhar 2 - The Revange Demonetization முதல் Dawood வரை Detailed
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கட்சி தலைவர்கள் மாவட்டம் தோறும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தி.க. தலைவர் வீரமணி, தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வர வேண்டாம் என, தி.மு.க. வேட்பாளர்கள், கட்சி தலைமைக்கு
விசில் கட்சித் தலைவரை சந்தித்த ஆனந்த தலைவர், 'இன்னும் இரண்டு நாட்கள் தான் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது....
சிப்பி மாவட்டத்தில், விசில் கட்சியில் வெகு காலமாக உழைத்துக் கொண்டிருந்த பெண்மணியை கட்சியினர்...
இலை கட்சி தலைவர், களத்தில் மக்கள் மத்தியில் தன் தேர்தல் பிரசாரம் வெகுவாக எடுபட்டிருக்கிறது என, சந்தோஷமாக...
சூரிய கட்சியின் கட்டளை மையங்கள் சென்னையின் 10 இடங்களில் செயல்படுகின்றன. அதில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,...
சூரிய கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழகம் முழுதும் அலைந்து...
@block_B@ 'கடந்த முறை நாங்க செஞ்ச தப்பே சூரிய கட்சியிடம் இருந்து தொகை வாங்கியதுதான். அதனால் எங்கள் ஒரிஜினாலிடியை...
@block_B@கை கட்சிக்காரர்களின் கரங்களிலும் எப்படியாவது விசிலை தவழ விட வேண்டும் என்று தவியாய் தவித்த தாகூரான அந்த...
@block_B@ சூரிய கட்சியில் 'சீட்' எதிர்பார்த்து காத்திருந்த பல நிர்வாகிகளுக்கு சீட் கிடைக்கவில்லை என்றதும்,...
@block_B@கட்சியின் மாஜி தலைவர் புதுச்சேரியில் பிரசாரத்தில் இருக்க, தாமரை கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய...
@block_B@ விசில் கட்சியின் வில்வித்தை நபர் வாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். சூரிய கட்சியின் பகுதி மற்றும் வட்ட...
வாசகர்கள் கருத்துகள்