Advertisement
சூ ரசம்ஹார தொகுதியை ரொம்பவும் மல்லுக்கட்டி இலை கட்சியிடம் இருந்து பெற்றது தாமரை கட்சி. அக்கட்சியின் டில்லி மகிழ்ச்சி தலைவர், தமிழகம் வந்தபோது, 'ஏன் இந்த தொகுதியை வாங்குனீங்க?' என தமிழக தலைவரிடம் கேட்க, 'பிரபல கோவில் உள்ள தொகுதி. எதிர்கால அரசியலுக்கு உதவும்' என்று சொல்ல, கோபமாகி விட்டாராம் டில்லி தலைவர். 'எல்லாம் சரி... நாம ஜெயிச்சாத்தானே, அரசியல் செய்ய முடியும்?' என கேட்க, லோக்கல் தலைவருக்கு முகம் தொங்கி விட்டதாம்.
வி சில் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் செங்ஸானவர், தலைவரின் பிரசாரத்துக்கு செய்ய வேண்டிய தேர்தல் நடைமுறைகள் குறித்து முன் கூட்டியே எடுத்துக் கூறினாராம். ஆனாலும், அதை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல், எல்லாம் தெரிந்தவர்கள் போல், கடைசி நேரத்தில் போலீஸ் அனுமதிக்காக கொடுக்க, அனுமதி மறுக்கப்பட்டு விட்டது. அதற்கு, சூரிய கட்சியை குறை சொல்லி தப்பிக்கப் பார்க்க, நடந்ததையெல்லாம் தலைவருக்கு எடுத்துச் சென்றுள்ளாராம் செங்ஸ் தலைவர்.
செ ன்னையின் ஆர்.கே.நகர் தொகுதியை கேட்டு சூரிய கட்சி தலைவரிடமே அடம் பிடித்திருக்கிறார் சிறுத்தை தலைவர். 'அருகில் இருக்கும் தொகுதியை கொடுத்து, ஜெயிக்கவும் வைக்கிறோம்' என்று டெல்டா பகுதியின் மீசை அமைச்சர் சொல்ல, 'என்னது அங்க இருந்துகிட்டு இங்க ஜெயிக்க வைப்பீங்களா... அண்ணே, நீங்க என்ன செய்வீங்கன்னு தெரியும். எனக்கு ஆர்.கே.நகரையே கொடுங்க' என்று சிறுத்தைத் தலைவர் கெஞ்ச, சூரிய கட்சி தலைவர் சிரித்து விட்டாராம்.
4. கை கட்சியில் 28 தொகுதிகளை போராடி பெற்று கொடுத்ததில், செல்வமான தலைவருக்கு மேலிடத்தில் மவுசு கூடியிருக்கிறதாம். இதையடுத்து, 28யும் ஜெயிக்க வைங்க. அதுக்காக, வேட்பாளர் தேர்வை சிறப்பா நடத்துங்க என, மேலிடத்தில் இருந்து பச்சைக் கொடி காட்டி உள்ளனராம். போதாதா... மனிதர், தனக்கான செல்வத்தை எப்படியாவது பெருக்கி விட வேண்டும் என முடிவெடுத்து, பசையான நபர்களை வேட்பாளர்களாக்க மீட்டிங் மேல் மீட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறாராம்.
5. கூட்டணி கட்சிகளை தொகுதி பங்கீட்டுக்கு அழைத்துப் பேசி, அவர்கள் கொடுத்த நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் தாங்கி, சுமுகமாக பேச்சை முடித்ததில் முழு பங்கும் சூரிய கட்சித் தலைவருக்கு மட்டுமே உண்டாம். அவருடைய வாரிசு தலைவரோ, இது குறித்து எதுவுமே கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு, திடுமென வேட்பாளர் தேர்வில் மட்டும் மூக்கை நுழைத்து, தன்னுடைய ஆதரவாளர்களையும் ஜால்ராக்களையும் பட்டியலில் நுழைக்க, தலைவருக்கு இம்சையாகி விட்டதாம்.
6. தாமரை கட்சியில் இருந்து இலை கட்சிக்கு டிரான்ஸ்பர் ஆன இரு நடிகையருக்கும் கபாலி குடிகொண்ட தொகுதியிலும், அரச பாளையத்திலும் சீட் கொடுப்பதாக, தலைவர் உறுதி கொடுத்திருந்தாராம். ஆனால், அவ்விரு நடிகைகளுக்கும் சீட் கொடுக்கக் கூடாது என்று கட்சியிலேயே இருக்கும் பெரிசுகள் சிலர், தலைவருக்கு தூபம் போட, இரு தொகுதிகளையும் கூட்டணி கட்சிகளுக்கே தலைவர் தாரை வார்க்க, நடிகைகள் இருவரும் கிளிசரின் இல்லாமல் அழுகிறார்களாம்.
என்ன பரிகாரம்?1. 'மயிலாப்பூர் தொகுதியில் இருந்து ஏன் பிரசாரத்தை தொடங்குகிறீர்கள். இப்படி
தாமரை கட்சியின் மலையானவருக்கு கோவை மற்றும் திருப்பூரில் 'சீட்' கொடுக்க தயாராக இருந்தாராம் இலை கட்சி தலைவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி: கடந்த
Dhurandhar 2 - The Revange Demonetization முதல் Dawood வரை Detailed
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதைக்
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக இருக்கும்
சென்னையின் தாம்பரத்தை ஒட்டிய வரம் தொகுதியில் ஜனநாயகம் கட்சி சார்பில் போட்டியிடும் பெருமாள் நபர், போகும்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுத்தை கட்சி போராடி பெற்ற தொகுதியில், செல்வனானவரை வேட்பாளர் ஆக்கினார் தலைவர்....
கங்கை மாவட்டத்தின் மாமதுரை தொகுதியில், சூரிய கட்சி சார்பில் போட்டியிடும் அரசியானவர், 'வெற்றி பெற்றால்,...
@block_B@ தாமதத்தால் எரிச்சல் 1. கை கட்சியின் தேசிய முன்னாள் தலைவரை, தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்துக்காக...
போக்கும் வரத்துமாக இருக்கும் அமைச்சரவை பிரதிநிதி, கடந்த ஐந்தாண்டு காலமாகவே தன் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட...
பூட்டு ஊரில் இலை கட்சி சார்பில் போட்டியிடும் வாசனானவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று,...
மாம்பழ கட்சியின் அப்பா தலைவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கியதும், மாம்பழத்து ஊரில் உள்ள தனியார்...
தாமரை கட்சியின் முன்னாள் தலைவரான மலையானவர், கட்சித் தலைமை தனக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற...
கேப்டனானவர் முதன்முதலில் போட்டியிட்ட சலம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று சொல்லி, அவருடைய மனைவி...
தன்னை யாரும் பின்தொடருவரோ என்ற அச்சம் ஏதும் இன்றி தைரியமாகவும் சுதந்திரமாகவும் வெளியே தெருவில் சென்று...
வாசகர்கள் கருத்துகள்