Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தே.ஜ., கூட்டணி பக்கம் சாயும் ரஜினி, அஜித் ரசிகர்கள்

 தே.ஜ., கூட்டணி பக்கம் சாயும் ரஜினி, அஜித் ரசிகர்கள்

- நமது நிருபர் -
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு, நடிகர்கள் ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் ஆதரவு அளித்து, தீர்மானம் நிறைவேற்றி வருவது, தி.மு.க., தலைமையிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜயின் த.வெ.க., வரவுக்கு பின், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி சார்பில், அக்கட்சி நிர்வாகிகள், ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களின் ஓட்டுகளைப் பெற வியூகம் அமைத்து, அதை செயல்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு தொகுதியிலும், தே.ஜ., கூட்டணி வேட்பாளர்கள், ரஜினி, அஜித் ரசிகர்களை சந்தித்து, ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் தேர்தல் பிரசாரத்தில், அஜித் ரசிகர்கள், அவருக்கு அஜித் படங்களை பரிசாக வழங்கி வருகின்றனர்.

சென்னை, கோவை, திருப்பூர், நாகர்கோவில், சிவகாசி போன்ற இடங்களில், சில தொகுதிகளில் அஜித், பழனிசாமி ஆகியோர் இருக்கும் படங்களை, ரசிகர்கள் வழங்கினர்.

அஜித்தை பொருத்தவரை, தன் ரசிகர்கள் தனிப்பட்ட முறையில், யாருக்கும் ஓட்டளிக்கலாம் என சுதந்திரம் வழங்கி உள்ளார். அவரது ரசிகர்களில் பெரும்பாலானோர், த.வெ.க., எதிர்ப்பு மனநிலையில் உள்ளனர்.

எனவே, அ.தி.மு.க., - பா.ஜ.,வினர், அவர்களின் ஓட்டுகளை வளைத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, தி.மு.க., வேட்பாளர்களும், அஜித் ரசிகர்களை சந்தித்து, ஆதரவு திரட்ட தொடங்கி உள்ளனர்.

அதேபோல் ரஜினி ரசிகர்களின் ஓட்டுகளையும், அ.தி.மு.க., - பா.ஜ., அணி தரப்பு தங்கள் பக்கம் இழுத்து வருகிறது.

சேலம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகி ஒருவர், அ.தி.மு.க., கூட்டணிக்கு முழு ஆதரவு அளித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

அதேபோல் கோவை, சிவகாசி, துாத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து, ஆதரவு கேட்டுள்ளனர்.

சமீபத்தில், த.வெ.க., மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, ரஜினி குறித்து பேசியது, அவரது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, த.வெ.க., விற்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். அத்துடன் ரஜினியின் ஆதரவை பெறவும், பா.ஜ., தரப்பில் முயற்சி நடந்து வருகிறது. இது, தி.மு.க.,வை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.

Advertisement

ஏப் 13, 2026 11:46 am

முதலில் இந்த கூத்தாடி பயல்களை நம்புவது கேவலம். அதிலும் மண் குதிரை ரஜினி அவன் வாயை திறக்க மாட்டான். தமிழக மக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை அனுபவித்து விட்டு இதுவரையில் ஒரு துரும்பையும் கிள்ளி போடாதவன்.

Reply Rate this
ஏப் 13, 2026 11:10 am

ரஜினிகாந்த் பேச்சை அவர் மகள்களே கேட்பதில்லை, ரசிகர்களா கேட்கப் போகின்றனர்? அடிச்சுக் கேட்டாலும் அரசியல் பற்றி அஜித் வாய் திறக்க மாட்டார்.

Reply Rate this
அட வீணா போன வேணு...மக்கள் திமுகவிற்கு ஏமாற மாட்டார்கள்
ஏப் 13, 2026 12:28 pm
Rate this
ஏப் 13, 2026 09:43 am

இதுநாள் வரைக்கும் மக்கள்தான் ஆட்சியை தேர்வுச் செய்தார்கள். இனிமேல் அப்படியில்லை, மக்கள் போய் திரையுலக ரசிகர்கள் மட்டும் முடிவுச் செய்யும் காலமாக போய்விட்டது.


முன்பெல்லாம் 21 வயதானால் மட்டும் வாக்களிக்கலாம். இப்போது 18 வயதானால் வாக்களிக்கலாம் என்று குறைத்துவிட்டார்கள். நாளை இதன் பின் விளைவுகளை காலம்தான் பதில் சொல்லும்.

Reply Rate this
ஏப் 13, 2026 08:42 am

இன்றைய முதலமைச்சர் போன்று மோசமான முதலமைச்சரை தமிழகம் இதுநாள்வரை சந்தித்ததில்லை, கண்டதுமில்லை. இனிமேலும் அப்படி வரக் கூடாது. தமிழக முதலமைச்சர் என்பவர் தமிழராக இருக்கவேண்டும். தமிழ் ஆங்கிலம் நன்குக் கற்றவராக இருக்கவேண்டும். குறைந்த பட்சம் நன்குப் படித்தவராக இருக்க வேண்டும். இருந்தும் தமிழ்மக்கள் பெருமனதோடு இன்றைய முதல்வரை தேர்வுச் செய்துள்ளனர்.


திமுகவினர் இந்துக்களுக்கெதிராக காட்டும் அசிங்கம் அவமரியாதையை பார்க்கும் போது அவர்கள் தமிழர்களாக பிறந்தது அவர்கள் குற்றமா? ஹிந்துவாக பிறந்ததும் இந்து தெய்வங்களையும் வணங்குவதும் அவர்களின் தவறா? தீபத் திருநாளன்று வெள்ளை மாளிகையில் அதிபரே விளக்கேற்றி மரியாதை செய்யும் போது இவர்களுக்கு மட்டும் என்ன வந்தது?


இவர்கள் இன்றும் பேசுவது பகுத்தறிவுக் கொள்கையா அல்லது பரதேசிகளின் கொள்கையா? குற்றமென்றால் எல்லா மதங்களிலும் குற்றங்களுண்டு. முடிந்தால் திமுக வினர் குற்றங்களில்லாத மதங்களை மக்களிடம் அடையாளம் காட்ட முடியுமா?


எந்தமுகத்தை வைத்துக் கோண்டு தமிழர்களிடம் தேர்தலில் தமிழர்களின் ஆதரவை கோருகிறீர்கள்? மீண்டும் ஆட்சி மலரவேண்டுமென்றால் முதல்வர் மாறவேண்டும். மக்களிடம் மன்னிப்பும் கோரவேண்டும்.

Reply Rate this
ஏப் 13, 2026 06:37 am

அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்து பல வருடங்கள் ஆகிறது அடித்து விடுங்கள்

Reply Rate this
புலம்பு.புலம்பு முருகா....வேற வழி
ஏப் 13, 2026 07:38 am
Rate this
மன்றங்களைத்தான் கலைத்துள்ளார்கள்.அவர் ரசிகர் கூட்டம் மாறிவிட வில்லை.அஜித்தை திமுக படுத்திய பாடு அவருக்கும் ரசிகர்களுக்கும் நினைவில் இருக்கு..போவியா...
ஏப் 13, 2026 09:18 am
Rate this
ஏப் 13, 2026 06:30 am

Rajinikanth… so careful. Not to support MODI, he should do that.At least with MODI, or Annamalai, he could simply stand in front of the crowd...Maybe he fears political criticism.

Reply Rate this
ஏப் 13, 2026 05:14 am

மே 4க்கு பிறகு
கோமா ஸ்டேஜ்கு
போயிடும்

Reply Rate this