திமுக நிர்வாகி காரில் ரூ.2.44 கோடி சிக்கியது; அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.46.88 லட்சம் பறிமுதல்
நமது நிருபர்
பெரம்பலூர் மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன் காரில் ரூ.2.44 கோடி சிக்கியது. அதேபோல், அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.46.88 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் சட்டசபை தொகுதிகுட்பட்ட செங்குணம் கிராமம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்தபோது கார் டிக்கியில் 5 அட்டை பாக்ஸில் ரூ.2.44 கோடி பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து கார் மற்றும் 2.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டு, பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன் கார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக கார் டிரைவர் ராஜேஷ் கிருஷ்ணன் உட்பட இருவரிடமும் வருமான வரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்