Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


காங்., உடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை : உதயநிதி

காங்., உடன் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை : உதயநிதி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: 'பதவி ஆசைக்காக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்ற காங்கிரஸ் கட்சியுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை' என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்தார்.
தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக தி.மு.க., இளைஞரணி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதாவது :
20 ஆண்டுகள் நம் தோள் மீது சவாரி செய்த காங்கிரஸ் நம் முதுகில் குத்தி விட்டு, பதவி ஆசைக்காக ஒரு வார்த்தை கூட சொல்லாமல் சென்றுவிட்டது. இனி எந்த காலத்திலும் அக்கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடாது. கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்கு, தி.மு.க., உழைப்பு தான் காரணம். தமிழக மக்கள் காங்கிரசுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement