Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


சீமானின் பஞ்சதந்திர கதைகள்

சீமானின் பஞ்சதந்திர கதைகள்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் தேர்தல் பிரசாரத்தில், குட்டிக்கதைகள் சொல்லி, 'இலவசங்கள் வேண்டாம்' என்பதை வலியுறுத்தி வருகிறார்.

அதன் விபரம்:

கங்காரு குட்டி - சோம்பேறித்தனம்

தாயின் பையிலேயே தங்கி சோம்பேறியான கங்காரு குட்டி, வெளியே வர மறுத்ததால் தாயும் குட்டியும் இறந்தன. அதுபோல், இலவசங்களை நம்பி, மக்கள் சோம்பேறியாகக் கூடாது; உழைத்து வாழ பழக வேண்டும்.

குதிரையும் லாடமும் - மறைமுக சுரண்டல்

தன்னை ஓட்டுபவர், தன் மீது வைத்த பாசத்தால், தனக்கு லாடம் கட்டுவதாக குதிரை நினைத்தது. ஆனால், தன் மீது ஏறி அதிக துாரம் பயணிக்கவும், வேலை வாங்குவதற்காகவும் தான் என்பது பின்னால் தான் குதிரைக்கு புரிந்தது. அதேபோல், தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் தரும் இலவசங்கள் பாசத்தால் அல்ல; உங்களிடம் இருந்து அதிக வரி வசூலிக்க தான்.

ஓநாயும் கத்தியும் - சுய அழிவு

கத்தியில் தடவப்பட்ட ரத்தத்தை நக்கும் ஓநாய், தன் நாக்கு பிளந்து அதில் வரும் ரத்தத்தையே சுவைப்பதை அறியாமல் இறக்கும்.

அதுபோல், அரசு தரும் இலவசங்கள் உங்கள் வரிப்பணமே; அதாவது உங்கள் ரத்தமே என்பதை உணர வேண்டும்.

திருடனும் நாயும் - அடையாளம் காணுதல்

வீட்டிற்கு தைரியமாக ஒருவன் திருட வந்ததை பார்த்த நாய், அவன் எஜமானனுக்கு வேண்டப்பட்டவன் என, முதலில் நினைக்கிறது. ஆனால், திருடன் வீசும் எலும்புத் துண்டை கண்டதும், அவன் திருடன் என புரிந்துகொண்டு அவனை கடித்தது.

அதுபோல், ஓட்டுக்கு பணம் கொடுப்பவன், உங்களிடம் திருட வருகிறான் என்பதை உணர்ந்து, அவனை துடைப்பத்தை கொண்டு விரட்டியடிக்க வேண்டும்.

நரியும் போர்வையும் - ஏமாற்று அரசியல்

ஆடுகளுக்கு போர்வை தருவதாகக் கூறி, அவற்றின் தோலையே நரிகள் உரித்தன. அதேபோல், இலவசங்களை வழங்கிவிட்டு மின் கட்டணம், சொத்து வரி உயர்வு வாயிலாக, உங்கள் ப ணத்தை அரசு பிடுங்கிக் கொள்கிறது.

Advertisement

ஏப் 10, 2026 11:04 am

கதை கூறும் கருத்து உண்மைதான் இதை சொல்ல ஒரு தைரியம் சீமானுக்கு இருக்கே

Reply Rate this
ஏப் 10, 2026 09:57 am

சீமான் அள்ளித் தெளிப்பது எல்லாமே புருடா தானே

Reply Rate this
ஏப் 10, 2026 09:53 am

ஆமைக்கறி ,மான் கறி ஊறுகாய் இந்தக் கதைகளை எல்லாம் விட்டு, விட்டு பஞ்சதந்திர கதைக்கு வந்து விட்டார் சீமான்.

Reply Rate this
ஏப் 10, 2026 09:09 am

மனிதர்களுக்கு புரியும்

Reply Rate this
ஏப் 10, 2026 09:08 am

மக்கள் திரள் நிதியில் வீட்டுக்கு 2 லட்சம் வாடகை விலை உயர்ந்த கார் என்று மக்கள் பணத்தில் மஞ்சள் குளிப்பது ஞாயமா ..??

Reply Rate this

எவ்ளோ தெளிவா கதை சொல்லி புரியவைத்து விட்டார் , ஆனால் பகுத்தறியா மடமக்கள் அவர்களின் சேனலை பார்த்தும் , தனது மதமே பெரிதென நம்பியும் நாட்டை சூறையாட அனுமதிக்கின்றனர்

Reply Rate this
ஏப் 10, 2026 08:01 am

Excellent examples and examples. But, Tamilians, particularly uneducated mostly lady folk believe that through freebies this Government is going out of the way to help them fill their houses with household items like fridge, washing machine, grinder, mixie, TV, laptop quality is another question and get overjoyed forgetting it is out of their hard earned money given to the Government through taxes and levies. Except Mr Seeman, no other politician talks so ly. Well done Mr Seeman, please ensure that this message reaches out to all in huts, apartments or bungalows.

Reply Rate this