Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தமிழக உள்துறை செயலராக பதவியேற்றார் மணிவாசன்

தமிழக உள்துறை செயலராக பதவியேற்றார் மணிவாசன்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தமிழக உள்துறை செயலராக நியமிக்கப்பட்ட மணிவாசன் இன்று மாலை பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதையொட்டி, தேர்தலை நியாயமாக நடத்தும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது.

அந்தவகையில் தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமாரை மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. புதிய செயலாளராக மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (ஏப்ரல் 11) மாலை உள்துறை செயலாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

ஏற்கனவே தலைமைச் செயலர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட் தேவாசீர்வாதம், தமிழக டிஜிபி மாற்றப்பட்டுள்ளனர்.

Advertisement