த.வெ.க.,வுக்கு 15 சதவீதம் ஓட்டுகள் கிடைக்கும்
த.வெ.க., தலைவரான விஜய், மாதத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறார். மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்துக்கு செய்யும் அநீதி பற்றி அவர் பேசுவது இல்லை. விஜய் பின்னால் பெரிய கூட்டம் இருப்பதை மறுக்க முடியாது. தேர்தலில், 15 சதவீதம் வரை, ஓட்டுகள் வரலாம்; அது, வெற்றியாக மாறாது. த.வெ.க.,வுக்கு 15 சதவீத ஓட்டு என்பது என் கருத்து. விஜய் வாங்கும் 15 சதவீத ஓட்டு எங்கள் வெற்றியை எளிதாக்கும்.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், ம.தி.மு.க.,வுக்கு எட்டு சீட்டுகள் பெற்று, அதில் வெற்றி பெற்றால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பது தொண்டர்கள் விருப்பம். இன்றைய சூழலில், புதிய இயக்கங்கள் கூட்டணிக்கு வந்துள்ளன. கூட்டணி பிரச்னைகளை, முதல்வர் ஸ்டாலின் சுமுகமாக பேசி, முடிவுக்கு கொண்டு வருவார். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவளிக்கிறோம்.
- துரை வைகோ,
முதன்மை செயலர், ம.தி.மு.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்