Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 நெல்லிக்காய் மூட்டை போல் தி.மு.க., கூட்டணி சிதறும்

 நெல்லிக்காய் மூட்டை போல் தி.மு.க., கூட்டணி சிதறும்

தமிழகத்தில், ரவுடியிசம் நிறைந்த தி.மு.க., ஆட்சி முடிய வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு பதிந்து சித்ரவதை செய்வதுதான் தி.மு.க., ஆட்சியின் பேஷன். திருப்பூரின் பனியன் தொழிலை பாதுகாக்க அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கோரிக்கை விடுத்தார். பிரதமர் மோடியின் ராஜதந்திர நடவடிக்கையால், அமெரிக்க வரி உயர்வு பிரச்னை தீர்ந்துள்ளது.

அ.தி.மு.க., கூட்டணி வைரம் பாய்ந்த மரம் போல் வலுவாக இருக்கிறது. ஆனால், தி.மு.க., கூட்டணியில் உள்குத்து, சண்டை சச்சரவு அதிகரித்துள்ளது.

தி.மு.க. கூட்டணியில் தொடர, கன்னியாகுமரி துவங்கி சென்னை வரை காங்.,கில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நெல்லிக்காய் மூட்டையை பிரித்து கொட்டியதுபோல், தி.மு.க., கூட்டணி கட்சிகள் சிதறப் போகின்றன.

- ஜெயராமன். தேர்தல் பிரிவு செயலர், அ.தி.மு.க.,

Advertisement