மதுவை வெள்ளமாக ஓட விட்ட தி.மு.க., அரசு
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதுாரை அடுத்த கதிராமங்கலத் தில் , எட்டாம் வகுப்பு மாணவர், தள்ளாத போதையில், அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசி, கலாட்டாவில் ஈடுபடும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவுகிறது.
எதிர்கால துாண்களை, இப்படி ஒரு நிலைக்கு தி.மு.க., அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஒரு மாணவன், வீட்டில் இருந்து பள்ளி செல்வதற்குள், குறைந்தது இரு மதுக்கடைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
கைக்கெட்டும் தொலைவில், மது தாராளமாக கிடைப்பதால், மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர். எட்டாம் வகுப்பு மாணவன் போதையில் கலாட்டா செய்வது தான், தி.மு.க., அரசின் சாதனை. வீதிதோறும் மதுவை வெள்ளமாக ஓட விட்ட தி.மு.க., அரசு தான், இதற்கு பொறுப்பேற்க வேண்டும். தி.மு.க., தேர்தல் அறிக்கையில், மது விலக்கு பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. ஸ்டாலின் எத்தனை அரிதாரம் பூசி வந்தாலும், நாட்டைக் கெடுத்த அவருக்கு மக்கள் படுதோல்வியை பரிசளிப்பர்.
- அன்புமணி
தலைவர், பா.ம.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்