Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மண்ணை கவ்வினார் செல்வப் பெருந்தகை!

மண்ணை கவ்வினார் செல்வப் பெருந்தகை!

நமது நிருபர்


தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் மூன்றாம் இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.

செல்வப்பெருந்தகை, முதலில் புதிய தமிழகம் கட்சியிலும், பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இருந்தார். அதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சிக்கு சென்றவர், எப்படியோ யாரோ பரிந்துரையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டார். கடைசியில், மாநில காங்கிரஸ் தலைவராகவும் ஆகி விட்டார். மாநகராட்சியின் கழிவு நீர் அகற்றும் திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, செல்வப் பெருந்தகை மீது குற்றச்சாட்டு எழுந்தது.

அதை அவர் மறுத்த நிலையில், குற்றம் சுமத்திய யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் சாக்கடை, மலக்கழிவுகளை ஊற்றிய சம்பவம் நடந்தது.தேர்தலில் போட்டியிட சீட் வினியோகம் செய்வதில் அவர் முறைகேடு செய்வதாக, காங்கிரஸ் எம்.பி.,க்களே குற்றம் சாட்டினர்.

இப்படி அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருந்த செல்வப் பெருந்தகை, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முன்னணியில் இருக்கிறார். தவெக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்ற நிலையில், செல்வப்பெருந்தகை மூன்றாம் இடத்துக்கு பின் தங்கியுள்ளார்.

யார் இந்த செல்வப்பெருந்தகை!

ரிசர்வ் வங்கியில் கடைநிலை ஊழியர் பணியில் இருந்தவர் செல்வம். அந்த பணியில் இருந்து விலகி, பூவை மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சியில் அரசியலை தொடங்கினார். புதிய தமிழகம் கட்சியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் சிறிது காலம் இருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் சார்பில் மங்களூர் தொகுதி எம்.எல்.ஏ., ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தவர், அதன் மாநில தலைவராகவும் பதவி வகித்தார். இடைப்பட்ட காலத்தில் தன் பெயரை செல்வப் பெருந்தகை என மாற்றிக்கொண்டார்.

2010ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர், 2024ல் அதன் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிந்தபின், மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாக ஏற்கனவே அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மே 05, 2026 01:10 pm

இந்த நாலு கட்சி அமாவாசை தீய கட்சில சேர்த்து 5 கட்சி அமாவாசை

Reply Rate this
மே 05, 2026 10:03 am

பேசமா திமுக ல யே போய் சேந்துடலாம் ..

Reply Rate this
மே 05, 2026 09:07 am

தவறு செல்வப்பெருந்தகைக்கு தமிழக காங்கிரஸ் தலைவரா நியமிச்சது எவ்வளவு தகுதியான திறமைவாய்ந்த தொண்டர்கள் இருக்கிறார்கள் அவர்களை தலைவரைக்காமல் இந்த கட்சிமாறியை ஏன் செல்வப்பெருந்தகையை காங்கிரஸ் தலைவரா நியமிச்சது காரணம்

Reply Rate this
மே 05, 2026 08:39 am

இது தேவையா செல்வப்பெருந்தகைக்கு அடின்னா ஆதி சம்மட்டியடி செல்வப்பெருந்தகையால் மீன்டு எழமுடியாத அளவுக்கு ஆனா இது செல்வப்பெருந்தகைக்கு தேவை தகுதி கொள்கை கோட்பாடு எதுவுமே இல்லாத ஆள் அதே மாதிரி காங்கிரஸ் செய்த மிகப்பெரிய தவறு செல்வப்பெருந்தகைக்கு தமிநாடு காங்கிரஸ் தலைவரா நியமிச்சது எவ்வளவு தகுதியான திறமைவாய்ந்த தொண்டர்கள் இருக்கிறார்கள்

Reply Rate this
மே 04, 2026 05:23 pm

தமிஷகத்தில் காங்கிரெசெய் குஷி தோண்டி புதைத்தவர்

Reply Rate this
மே 04, 2026 04:41 pm

சொந்த செலவில் சூனியம் வைப்பது என்பது இதுதானா? பெரும் தொகை இருப்பதால் கவலை இல்லை.

Reply Rate this
மே 04, 2026 04:33 pm

அரசியல் ஞானி எங்கே.

Reply Rate this
மே 04, 2026 03:42 pm

இன்று முதல் நீ செல்லா பெருந்தகை என்றழைக்கபடுவாய்.

Reply Rate this
மே 04, 2026 02:38 pm

திருப்பரங்குன்ற முருகன் சாபத்துக்கு ஆளான திருட்டு திராவிட கோவால் புற குடும்பத்தை வைத்து செய்து விட்டார்கள் தமிழக இந்துக்கள்...

Reply Rate this
மே 04, 2026 02:07 pm

இனி காங்கிரஸ் இருந்தால் என்ன போனால் என்ன.... செல்வம் சேர்த்தாச்சு பெருந்தொகை சேர்த்தாச்சு. சேர்த்த இரண்டையும் சேர்த்தால், செல்வ பெருந்தொகை ஆயாச்சு. பணத்தை சேர்த்து பலத்தை காட்டியாச்சு. இனிமேல் காங்கிரஸ் போனால் என்ன.. இருந்தால் என்ன...

Reply Rate this