Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஒரே காரணம் பிரதமர் மோடி

 மக்கள் பாதுகாப்புடன் இருக்க ஒரே காரணம் பிரதமர் மோடி

மாநில அரசு, மத்திய அரசிடம் மோதல் போக்கை கடைப்பிடித்தால், மாநிலங்களுக்கு நிதி வராது. ஈரானில், இஸ்ரேல் - அமெரிக்கா சேர்ந்து குண்டுமழை பொழிகின்றன. ஆனால், ஹார்மூஸ் கடல் பகுதியில், இந்திய சரக்கு கப்பல்களை மட்டும் ஈரான் அனுமதித்து, அனுப்பி வைக்கிறது. இதற்கு காரணம், மோடியின் எளிய அணுகுமுறை தான்.

போரால், உலக நாடுகளில் உள்ள மக்கள் பதற்றத்தில் உள்ளபோது, இந்திய மக்கள் மட்டும் பாதுகாப்புடன் உள்ளனர். இதற்கும் காரணம் மோடி தான். இந்தியாவில், மதக் கலவரம் ஏற்பட்டதில்லை. ஒரு முஸ்லிம் கூட பாதிக்கப்பட்டதில்லை. பா.ஜ., உடன் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூட்டணி வைத்திருப்பதற்கு காரணம், நம் நாட்டு நலன் மீது அவருக்கு இருக்கும் அக்கறை தான்.

- ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

Advertisement