கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக சுமுக ஒதுக்கீடு!: திமுக போல் அக்கப்போர் இல்லை
சென்னை: அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பாஜ, பாமக, அமமுக கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இன்று இறுதி செய்யப்பட்டது. பியூஷ் கோயல் இன்று காலை சென்னை வந்து பேச்சு நடத்திய நிலையில் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன.
தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது. இன்னும் வி.சி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., கட்சிகளுக்கு தான் தொகுதிகளை ஒதுக்க வேண்டியுள்ளது.
அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., - புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
பேச்சுவார்த்தை
கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக இபிஎஸ் உடன், பா.ஜ., மேலிட தலைவர்கள் பேச்சு நடத்தி உள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, இபிஎஸ் கடந்த வாரம் டில்லியில் சந்தித்து பேசினார். அப்போது, பாஜ உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள், அதிமுக போட்டியிட உள்ள தொகுதிகள் தொடர்பாக பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுவரை ரகசியமாக நடத்தப்பட்ட பேச்சுகளில், ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சை, அதிமுக இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கியது.
இதற்காக, மத்திய அமைச்சரும், பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், இன்று சென்னை வந்தார்.
ஒப்பந்தம்
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சென்று, இன்று மதியம் இபிஎஸ் ஐ சந்தித்து பேசினார். தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலர் தினகரன் உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்தார்; தொகுதி பங்கீட்டை இறுதி செய்யப்பட்டது. இதன் பிறகு கூட்டணி கட்சி தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தனர். 9 ஆண்டுகளுக்கு பிறகு தினகரன் முதன்முறையாக இங்கு வந்தார். பியூஷ் கோயல், அன்புமணி, தினகரன், நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்ட என்பதை இபிஎஸ் அறிவித்தார். முதல்வருக்கு பயம் https://t.co/UwwTKu9nnw pic.twitter.com/V6RRMwqjWK ஒற்றுமை https://t.co/UwwTKu9nnw pic.twitter.com/RIHNOJRbbm
@twitter@https://x.com/dinamalarweb/status/2036019563125752315
@@twitter@@
இதன்படி பாஜவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து நடந்து வருவதாக இபிஎஸ் கூறியுள்ளார். இன்று இரவுக்குள் அனைத்து கட்சிகளுக்குமான தொகுதி பங்கீடு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து இபிஎஸ் கூறியதாவது:210 தொகுதிகளில் கூட்டணி வெற்றி பெறும். அதிக தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நாங்கள் டில்லிக்கு சென்றால் திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதல்வரின் வாடிக்கை.ஒவ்வொரு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அவ்வப்போது கருத்து பரிமாறுவதற்காக டில்லி செல்கிறோம். ஆனால், தோல்வி பயம் காரணமாக நாங்கள் டில்லி சென்றால் பயப்படுகிறார். அச்சப்படுகிறார்.
டில்லி சென்று சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறோம். எங்கள் கூட்டணி தலைவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதி என அறிவித்துள்ளோம். மற்ற கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது. இன்று இரவுக்குள் அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும். என தெரிவித்தார்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்