Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


புதுச்சேரியில் வி.சி.க.,வுக்கு பானை சின்னம் கிடையாது

புதுச்சேரியில் வி.சி.க.,வுக்கு பானை சின்னம் கிடையாது

சென்னை: 'புதுச்சேரியில், பானை சின்னம் ஒதுக்கப்படாததால், சுயேச்சை சின்னத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவர்,'' என, அக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:

தமிழக சட்டசபை தேர்தலில், விடுதலை சிறுத்தைகள் போட்டிட உள்ள எட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. தி.மு.க., கூட்டணியில் இழுபறி ஏதும் இல்லை. கூட்டணியில், அதிக அளவிலான கட்சிகள் இருக்கும்போது, தாமதம் இருக்கத்தான் செய்யும். இன்றைக்குள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்.

புதுச்சேரியில், ஒரு தொகுதியில், தி.மு.க., ஆதரவுடனும், இரு தொகுதிகளில் தனித்தும் வி.சி.க., போட்டியிடுகிறது. புதுச்சேரியில் பானை சின்னம் ஒதுக்குமாறு, தேர்தல் கமிஷனிடம் கேட்டோம். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை; பானை சின்னம் கிடைக்காவிட்டால், சுயேச்சை சின்னத்தில், வி.சி.க., வேட்பாளர்கள் போட்டியிடுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement