Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 'ஆங்கிலேயரை ஆத்திரமடைய செய்த சொல் தி.மு.க.,வினரையும் கோபமடைய செய்கிறது'

 'ஆங்கிலேயரை ஆத்திரமடைய செய்த சொல் தி.மு.க.,வினரையும் கோபமடைய செய்கிறது'

சென்னை: பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி அறிக்கை: முதல்வர் விஜய் பதவியேற்பு விழாவில், 'வந்தே மாதரம்' பாடியதை, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சர்ச்சையாக்கி உள்ளன.

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், பிரிவினைவாத சிந்தனையை விதைக்கும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், வந்தே மாதரம் பாடலையும் தங்கள் பிரிவினைவாத அரசியலுக்கு பயன்படுத்துவது கண்டனத்திற்கு உரியது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, மக்களின் உள்ளத்தில் சுதந்திர தீயை பற்ற வைத்து, பல லட்சம் இளைஞர்களை போராட்டத்தில் ஈடுபட வைத்தது, 'வந்தே மாதரம்' என்ற சொல் தான். இது, வெறும் சொல்ல அல்ல; இந்தியர்களின் உயிர் மூச்சு.

கோடிக்கணக்கான இந்தியர்களை, 'வந்தே மாதரம்' என்ற ஒற்றை சொல் இணைக்கிறதே என்ற ஆத்திரத்தில், அதற்கு ஆங்கிலேயே அரசு தடை விதித்தது. ஆங்கிலேயர்களை ஆத்திரமடையச் செய்த, 'வந்தே மாதரம்', தற்போது தி.மு.க.,வினரை கோபமடைய செய்கிறது.

சுதந்திரம் கிடைக்க காரணமான வந்தே மாதரம் பாடலை எதிர்ப்பது, நாட்டையே எதிர்ப்பது போன்றது. எனவே, தி.மு.க., போன்ற கட்சிகள், குறுகிய பிரிவினைவாத அரசியலை தொடராமல், தேச நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement