'போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு படை பணிகளை விரைவுபடுத்த வேண்டும்'
சென்னை: அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை:
சேலம் மாவட்டம், காட்டுவளவு பகுதியில், இரவு நேரத்தில் மது போதையில் இருந்த மாணவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஒரு மாணவரை சக மாணவர்கள் அடித்து கொலை செய்ததோடு, வீடியோ எடுத்து மகிழ்ந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் ஒழிப்பு என்ற பெயரில் 1.0, 2.0 என பெயர் வைத்தனரே தவிர, எவ்வித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க, பிரத்யேக தடுப்பு படையை அமைத்துள்ளது.
அதே நேரத்தில், காலம் தாழ்த்தாமல் அப்படையின் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். போதைப் பொருட்களின் நடமாட்டத்தை ஒழித்து, மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்