வீட்டில் இல்லாதபோது கொள்ளையடிக்க வருவர்
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 'உங்க கனவ சொல்லுங்க, ஓரணியில் தமிழ்நாடு' என்றெல்லாம் பெயரிட்டு வீடு வீடாகச் சென்று, மக்களை சந்தித்து செல்போன், ஆதார் எண்களை, அரசு தரப்பில் கேட்டு வாங்கினர். இது தரவு திருடும் வேலை என்று சொல்லி, கோர்ட்டுக்குச் சென்றோம். நாங்கள் என்ன நினைத்து, அதை தடுக்க முற்பட்டோமோ, அது தான் இப்போது நடக்கிறது. சேகரித்த மொத்த தரவுகளையும், தி.மு.க.,வுக்கு தேர்தல் வேலை பார்க்கும் 'பென்' நிறுவனத்திடம் கொடுத்து விட்டனர்.
அந்த விபரங்களை வைத்துத்தான், இப்போது செல்போனில் அழைத்து, 'தி.மு.க.,வுக்கு ஓட்டளியுங்கள்; நீங்கள் தி.மு.க., ஆதரவாளர்' என்று பேசுகின்றனர். அரசை நம்பித்தானே விபரத்தைச் சொன்னீர்கள். அதை தவறாகப் பயன்படுத்துகின்றனர். இதே விபரங்களை வைத்து, நீங்கள் வீட்டிலில்லாதபோது கொள்ளையடிக்கவும் வரலாம். அதனால், பெண்கள் - இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்