காங்கிரஸ் நிர்வாகியை வேட்பாளராக அறிவித்த திருமாவளவன்; விசிகவினர் 'அப்செட்'
கடலூர்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரை, தனக்கு பதிலாக வேட்பாளராக திருமாவளவன் அறிவித்திருப்பது விசிகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாநில அரசியலில் கவனம் செலுத்துவதற்காக, சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து, காட்டுமன்னார் கோவில் தொகுதியில் களமிறங்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார். இந்த நிலையில், திடீரென தனது முடிவை மாற்றிய அவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த தலைவர் இளையபெருமாள் மகன் ஜோதிமணியை வேட்பாளராக அறிவித்தார்.
இந்த நிலையில், திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. காட்டுமன்னார் கோவில் தொகுதியில் போட்டியிடுவது குறித்து யாரும் தன்னிடம் கேட்கவில்லை என்று ஜோதிமணி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; திடீரென்று தான் எனக்கு தகவல் வந்தது. என்கிட்ட யாரும் வந்து கேட்கவில்லை. இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரசில் விருப்பமனு கொடுத்திருந்தேன். இப்போது, திடீரென திருமாவளவன் அறிவித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் ஆலோசித்து நடப்பேன்.
நான் இப்போது காங்கிரசில் தான் இருக்கிறேன். ஆரம்ப காலத்தில் இருந்து காங்கிரசில் தான் இருக்கிறேன். இடையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சென்று விட்டு, மீண்டும் காங்கிரசுக்கே வந்து விட்டேன். காங்கிரஸ், விசிக கூட்டணியில் இருக்கின்றன. ஒருவேளை எனக்காக விட்டுக் கொடுங்க என்று விசிகவிடம் காங்கிரஸ் கேட்டிருக்கலாம். தலைவர்கள் எடுக்கும் முடிவில் இந்தத் தொகுதி எனக்கு கிடைத்திருக்கலாம். திருமாவளவன் கொடுத்து அவருடைய சின்னத்தில் நிற்க வைக்கிறார்களா? அல்லது காங்கிரஸ் சின்னத்தில் நிற்க வைக்கிறார்களா? என்பது குறித்து எங்கள் தலைவரும், திருமாவளவனும் கலந்துபேசி, என்ன முடிவு ஏற்று, அதனை செய்வேன், இவ்வாறு அவர் கூறினார்.
திருமாவளவனின் இந்த முடிவு விசிகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விசிக எம்எல்ஏக்களாக இருக்கும் 3 பேருக்கு வாய்ப்பு கொடுக்காதது பற்றி பேசிய திருமாவளவன், "சமூக நீதி பார்வை தான் காரணம். கட்சியில் இருக்கும் பிறருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கம் தான்," என்று கூறினார். ஆனால், விசிகவில் இருப்பவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், இப்படி கட்சியில் இல்லாத ஒருவரை வேட்பாளராக அறிவித்து இருப்பது அவரது கட்சியினரிடையே முனுமுனுப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருக்காக தன்னுடைய தொகுதியை திருமாவளவன் விட்டுக்கொடுத்தது ஏன்? இதன் பின்னணியில் ஏதேனும் அழுத்தம் இருக்குமா? என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளன.
Advertisement
வேறு கட்சியில் சீட் கேட்ட ஒருவரை தன் கட்சியில் நிற்க வைத்து சீட் கொடுத்த பெருமைக்குரிய தலைவர் இந்தியாவிலேயே அண்ணன் திருமா மட்டும்தான்.
காங்கிரசில் சீட் கேட்டு விருப்ப மனு கொடுத்தவர்க்கு வி.சி.கவில் சீட்டா? சின்னம் கையா? பானையா? காங்கிரசுக்கு அப்ப 29ஆ? ஒரே குழப்பமா இருக்கே?
காட்டு மன்னார் கோயில் தொகுதியில் தோல்வி உறுதி என்று வேட்பாளர் ஜோதிமணி முகத்தை பார்த்தாலே தெரிகிறது
பெட்டிகள் எங்கு கிடைக்கிறதோ அங்கு சாதகமாக நடப்பதே சமூக நீதி. இதுகூட தெரியாமல் இவரின் பின்னால் ஒரு கூட்டம். இவர்கள் அடுத்தவர்களை தற்குறி என்பர்...
இன்னும் பயிற்சி வேண்டும் போல , ஆரம்பத்தில் இருந்தே திசை தெரியாமல் சுற்றிக் கொண்டிருப்பது திருமாதான் , , , தெளிவா இருக்க விட மாட்டாய்ங்கல்ல அறிவாலய வில்லன்கள் ? . . . சுத்தல்ல விட்டு ? ?
அண்ணனின் இந்த ராஜதந்திரத்தை சாணக்கியன் உயிர்பெற்று வந்து கற்றுக் கொண்டு விட்டு மீண்டும் அவரிருக்குமிடேமே சென்றுவிடலாம். மாரு இல்லாத துரை முருகன் சொல்வது போல் அடேங்கப்பா எங்களுக்கு தெரியும். இந்த உள்வாடகை சீட்டு எத்தனைக்கு ஏலம் போச்சோ ?
எனக்கு தெரிந்தவரையில் பல நடுநிலையான அரசியல் பார்வை கொண்டவர்கள் கூற்றுப்படி திறமையான தாழ்த்தப்பட்ட தலித் எஸ்.சி எஸ்.டி மக்களை மேலே தூக்கி விடுவது கட்சி பொருப்பு, எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரிகள் நிர்வாக பொறுப்புகள் கொடுத்து கெளரவிக்கும் ஒரே கட்சி பாஜக மட்டும் தான் அண்ணல் அம்பேத்கரை எம்.பி ஆக்கவிடமல் அவரை தோற்கடிக்க நினைத்தார் நேரு ஆனால் அவரை எம்.பி ஆக்கியது பாஜக வின் ஜனசங்கம். ஆனால் தமிழகத்தில் ஊடகங்களை கையில் வைத்துக் கொண்டு உண்மையை மறைந்து திரும்ப திரும்ப பாஜக மதவாத கட்சி, பிராமணர் கட்சி, எஸ்.சி., எஸ்.டிகளுக்கு எதிரானது போன்ற பொய் பிரச்சாரம் செய்து தமிழகத்தில் பாஜக வளரவிடகூடாது என திட்டமிட்டே சதி செய்து தமிழர்கள் மற்றும் தமிழகத்தின் வளச்சியை தடுக்கின்றனர் இந்த திராவிட, கம்யூனிஸ, நக்சல், போதை மாபியாகள், மதமாற்ற கூட்டங்கள், அன்னிய மத சிந்தனைகள் கொண்ட கும்பல்கள்.

மொத்தத்துல கடுப்பான சொந்தகட்சிகாரனுகளே கரு வைத்து பழி வாங்கிட்டானுக. இதுக்கு ஸ்கெட்ச் போட்டு குடுத்தது தோழமை கட்சின்னு பேசிக்கிறாங்க. தன் உயரம் தெரியாமல் அளவுக்கதிகமாக ஆடும் குறைகுடங்களுக்கு இப்படித்தான் நடக்கும்.