Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


எனக்கு 'சீட்' வாங்கி தந்தது டி.வி.எஸ்., தான்:உளறிய ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர்

எனக்கு 'சீட்' வாங்கி தந்தது டி.வி.எஸ்., தான்:உளறிய ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஓசூர் : ''டி.வி.எஸ்., நிறுவனம் தான் எனக்கு 'சீட்'வாங்கி கொடுத்தது. அதுவே கடைசி வரைக்கும் துாக்கி பிடிக்காது. காலையில் தான், 50 லட்சம் ரூபாய் திரட்டி கிருஷ்ணகிரிக்கு அனுப்பினேன்,'' என, ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர் குப்புசாமி பேசியது, சர்ச்சையாக வெடித்துள்ளது.

ஓசூர் டி.வி.எஸ்., தொழிற்சங்க தலைவரான குப்புசாமி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடுகிறார்.

இவர், சமீபத்தில் ஓசூரில் நடந்த காங்கிரசின் ஐ.என்.டி.யூ.சி., தொழிற்சங்க கூட்டத்தில் பேசியதாவது:நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கே 28 'சீட்'டு தான் தருகிறார்கள். தமிழக காங்.,கில் மட்டும், 250 தலைவர்கள் உள்ளனர். அவர்களை மீறி, என் பக்கம் ஒரு 'சீட்' விழ வேண்டுமெனில், சுனாமி புயல் அடிச்சு வந்த மாதிரி; 'சீட்' வாங்குவது சாதாரண விஷயம் இல்லை.

28 'சீட்'டுகளில், 15 'சீட்'டுகளை எம்.எல்.ஏ.,க்களுக்கே கொடுக்க வேண்டுமென சொல்லிவிட்டனர். மீதம் உள்ளதை வாரிசுகளுக்கு கொஞ்சம் கொடுத்தாங்க. சத்தியமா என்கிட்ட பைசா இல்லை. தொழிற்சங்கம் சார்பில் எனக்கு நிதி திரட்டி கொடுக்கணும். டி.வி.எஸ்., நிறுவனம் தான் எனக்கு 'சீட்' வாங்கி கொடுத்தது. அதுவே கடைசி வரைக்கும் துாக்கி பிடிக்காது.இப்படியாக அவர் பேசியதை, தேர்தல் பறக்கும் படையினர் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தனர். அதை கூட அறியாத வேட்பாளர் குப்புசாமி, ''இன்று காலையில் தான், 50 லட்சம் ரூபாய் திரட்டி கிருஷ்ணகிரிக்கு அனுப்பினேன்,'' என்றார்.

ஒரு வேட்பாளர், 40 லட்சம் ரூபாய் தான் செலவு செய்ய வேண்டும் என்பது விதி. இந்நிலையில், 50 லட்சம் தயார் செய்து அனுப்பியதாக, குப்புசாமி கூறியதும், மேடையில் இருந்தவர்கள் சுதாரித்து, அவரை உஷார் படுத்தினர்.

அதன் பின், ''கட்சி நிர்வாகிகளுக்கு டீ, காபியாது வாங்கி தரணும். என் கண்ணில் ஆப்பரேஷன் செஞ்சிருக்குது,'' என ஏதேதோ பேசிய குப்புசாமி, 'டாபிக்'கை மாற்றினார்.இப்படி அவர் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

Advertisement

ஏப் 14, 2026 12:49 pm

பறக்கும்‌படை? சிரிப்புதான் வருகுது. எதிர்கட்சிகள் பொது மக்கள்னா பறிக்கும் படை. ஆளும் கட்சினா ஹி ஹி ஓடும்‌ படை

Reply Rate this
ஏப் 11, 2026 06:26 pm

It is TRUE

Reply Rate this
ஏப் 11, 2026 08:31 am

2014ல் ஏற்பட்ட மாற்றம் நம்மை காப்பாற்றியது இல்லை என்றால் உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன். நாமும் நமது நாடும் மாற்ற பட்டு இருக்கும் ...

Reply Rate this
ஏப் 10, 2026 09:29 pm

சுதந்திரத்துக்கு ஓரளவு உழைத்ததாக வரலாற்றில் பதிவான ஒரிஜினல் காங்கிரஸ் நிஜலிங்கப்பா அவர்களோடு மறைந்து விட்டது..இந்திரா காந்தியின் காங்கிரஸ் இந்த தேசத்தை மீண்டும் இஸ்லாமிய அடிமைநாடாக்க சகல முயற்சிகளையும் செய்தது.தெய்வாதீனமாக நாம் பாஜக வால்/ மஹனீயர் ஸ்ரீ மோதிஜி/ அமித் ஷா/ ஜெய்சங்கர் மற்றும் ஸ்ரீ ராஜ்நாத் சிங் ஸ்த்ரீ யோகி ஆதித்ய நாத் ஆகியோரால் காப்பாற்றப் பட்டோம்.. காங்கிரஸ் கட்சியை ஊற்றி மூடி புதைத்து பாலூற்றுவதுதான் நாம் பாரதத்தாய்க்கு செய்ய வேண்டிய கடமை...

Reply Rate this
ஏப் 10, 2026 09:19 pm

காங்கிரஸ் நாட்டிற்கும் சமூகத்திற்கும் வீட்டிற்கும் கேடு விளைவிக்கும் கட்சி. மதம் பிடித்த மதவாத இந்து விரோத கட்சி. நம் நாட்டின் எதிரிகளுக்கு துணை போகும் கட்சி. நிரந்தரமாக வாக்குகளால் அழிக்கப்பட வேண்டிய ஒன்று.

Reply Rate this
ஏப் 10, 2026 09:15 pm

இது நிச்சயம் வெள்ளையில்லை. 50. லட்சம் கொடுத்த நிறுவனம் மீது நடவடிக்கை தேவை. தாட்சண்யம் பார்க்கக்கூடாது.

Reply Rate this
ஏப் 10, 2026 09:12 pm

இதையெல்லாம் எதிர்பார்த்துதான் அ‌திக சீட்களை கொடுக்க திமுக தயங்கியது. விஜய் பிழைத்தார்.

Reply Rate this

இவர் திமுக கூட்டணியில் இருப்பவர். அதனால் தேர்தல் கமிஷன் ஒன்றும் செய்யாது .இதுவே பாஜக அல்லது அதிமுக வேட்பாளர் பேசினால் இந்நேரம் வழக்கு பாய்ந்திருக்கும்

Reply Rate this