குழந்தைகளை பிரசாரத்துக்கு பயன்படுத்துவதா? விஜய் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை
சென்னை: தேர்தல் பிரசாரத்தின் போது, அரசியல் லாபத்துக்காக குழந்தைகளை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக தவெக தலைவர் விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி மாநில டிஜிபிக்கு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.
சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் விஜய் பேசும்போது, பெற்றோர்களை விசில் சின்னத்துக்கு ஓட்டுப்போட குழந்தைகள் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தார். ஒரு சில முறை இவ்வாறு விஜய் பேசியிருந்தார்.
விஜயின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்தது. அரசியல் காரணங்களுக்காக குழந்தைகளை தூண்டிவிடுவது சட்டவிரோதமானது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார்கள் வந்தன.
இந்நிலையில், தமிழக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் சார்பில், போலீஸ் டிஜிபிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில், தேர்தல் பிரசாரத்தின் போது ஓட்டு சேகரிப்பதற்காக குழந்தைகளை தூண்டிவிட்டு, பெற்றோரை தவெகவிற்கு ஓட்டுப்போடு வற்புறத்தவைத்த குற்றச்சாட்டு தொடர்பாக விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக குழந்தைகளை பயன்படுத்தியது குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களை அகற்ற வேண்டும். விஜய் மற்றும் அவரது கட்சியின் பிரசார குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் கமிஷனருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
Advertisement
குழந்தைகள் கமிஷன்னு ஒண்ணு இருக்காமா? ஓஹோ அப்புடியா? அப்புடீன்னா த வெ க வுல குழந்தைகள் விங் ன்னு ஒண்ணு போட்டு கம்ப்ளெயிண்ட் குடுத்த வனை தனியா திருட்டு தீயமுக பாணியில் கவனிக்கோணும். தலீவரு கலீஞரு தொட்டதுக்கெல்லாம் மாணவச் செல்வங்களை கட்டாயப்படுத்தி கூட்டி வந்து வேகாத வெய்யிலில் நிற்க வைத்து அரசியல் பண்ணியது எல்லாம் என்னா கணக்கு? முகஸ் ஆட்சியில் கூட நீட் பூட்ன்னு மாணவர்களை கறிவேப்பிலை மாதிரி பண்ணினாய்ங்களே அது என்னவாம்? விஜய்யை கண்டு ஏண்டா இப்புடி அலறுகிறான்கள்? முகஸ் ஒழுங்கா ஆட்சி நடத்தியிருந்தா விஜய் அரசியலுக்கே வந்திருக்க மாட்டான். முகஸ் ஐ எதிர்க்க ஓரு ஆளு எதனால் வரான்? அதுலேயே முகஸ் தில்லாலங்கடி வேலை தெரிஞ்சு போச்சு?
மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிசன் இத்தனை காலமும் என்ன செய்து கொண்டிருந்தது? அன்றே விஜய் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருக்கலாமே ? தேர்தலும் முடிந்து முடிவு வருவதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கின்ற வேளையில் இந்த பரிந்துரை என்பது உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படும். மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிசன் குழந்தைகள் திரைப்படங்கள் பார்ப்பதற்கு எதிராகவும் பரிந்துரை செய்ய வேண்டும். செய்வார்களா? அல்லது யாரவது கட்டளையிடும்வரை காத்துக் கொண்டிருப்பார்களா? உரிய நேரத்தில் எடுக்கப்படாத அனைத்து நடவடிக்கைகளும் பலன் தரப்போவதில்லை.
பெண்களை, ஆண்கள் மற்றும் கணவர்களுக்கு எதிராக தூண்டிவிட்டு 75வருடங்களாக ராமசாமி காலத்திலிருந்து அரசியல் செய்யும் திராவிடக்கட்சிகளை பற்றி இதுவரை எந்த புகாரும் யாரும் கொடுக்கவில்லை. இப்பொது நடந்த தேர்தலில்கூட திமுக தலைவர் உங்கள் கணவர்கள் சொல்வதை கேட்காதீர்கள் என பிரச்சாரம் செய்தார், இவற்றைபற்றியெல்லாம் யாரும் இதுவரை புகார்கொடுக்கவில்லை. தேர்தல் பிரச்சாரம் என்பது ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். தேவைப்பட்டால் ஏற்றுக்கொள்ளலாம் இல்லையன்றால் விட்டுவிடவேண்டியதுதானே. இதிலென்ன புகார் வேண்டியிருக்கு. யார் தூண்டுதலால் இதனை செய்கிறீர்கள்.
திமுக கெத்து, தவேக வெத்து என்று ஒரு சிறுமி சொன்ன பஞ்சை ரசித்த முதல்வர். இன்றைய செய்தி. கண்டிப்பதற்கு பதிலாக ரசித்த முதல்வர்.
பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடும் மக்கள், தவறுகளை சகித்துக் கொண்டு வாழும் மக்கள் கூட்டத்தில் எதிர்த்து பேசிவிட்டு பின் தனியாக லஞ்சம் கொடுக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்போது திறமையான தலைவர்கள் வரமாட்டார்கள். வேடிக்கை காட்டும் ஆசாமிகள் தான் இருப்பார்கள்.
விஜய் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அளவுக்கு என்ன தவறு செய்தார் சொல்லுங்க வாக்குகள் பெற தலா ஒரு வொட்டிற்கு 2000, 1500, 5000 வீதம் தருவது தப்பில்லை?? அவதூறு பேச்சுகள் கொச்சை படுத்தி பேசுகின்ற தி.மு.க அடிமை அமைச்சர்கள் ?? நள்ளிரவு யாருக்கும் தெரியாமல் தேர்தல் ஆணையத்தின் துணையோடு ballot box seal ed pani முறைகேடு இல்லை ? வெத்து அரசியல் நாடக அரசியல் அராஜக அரசியல் தவறு இல்லை ? அப்டி தானே நல்லடக்கத்தோடு பேசுங்க தோழர்களே இருங்க வர மே 4 உண்மை புலப்படும் அப்ப போய் செவுத்துல முட்டிக்குங்க
குழந்தைகளை வைத்து ஓட்டு பிச்சை எடுக்கும் இவன் என்ன மாதிரியான ஜென்மம் என்றே எனக்கு தெரியவில்லை இவன் ஒரு சைக்கோ என இவனுடைய குடும்ப பிரச்சினை வெளியே வந்த பின்புதான் தெரிந்தது அப்பட்டமான சோம்பேறி ஏசி ரூமில் படுத்துக் கொண்டு ஜல்ஸா செய்பவனுக்கு 120 தொகுதிகள் கிடைக்குமாம் அப்போ வெயிலில் சுற்றி ஓட்டு பிச்சை எடுத்த திருடனுகளுக்கு?

விஜய்க்கு போட்டியாக குழந்தைகளிடம் ஸ்டாலினோ சீமானோ ஒட்டு போடும்படி சொல்லவேண்டியது தானே? இதற்காக எல்லாம் தேர்தல் கமிஷனை நாடுவது சரியல்ல.