Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


12 தொகுதிகள் கேட்கிறது வி.சி.,: தி.மு.க., கூட்டணியில் அடுத்த சிக்கல்

12 தொகுதிகள் கேட்கிறது வி.சி.,: தி.மு.க., கூட்டணியில் அடுத்த சிக்கல்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சட்டசபை தேர்தலில், கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, எட்டு தொகுதிகள் தர தி.மு.க., தலைமை முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி., கட்சி, தொடர்ச்சியாக ஒன்பது ஆண்டுகளாக அடுத்தடுத்த தேர்தல்களை சந்தித்து வருகிறது. இதனால் அக்கட்சி, இரண்டு எம்.பி.,க்கள், நான்கு எம்.எல்.ஏ.,க்களுடன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட, வி.சி., தரப்பில் 12 தொகுதிகள் கேட்ட நிலையில், கூட்டணியின் தலைமையான தி.மு.க., தரப்பில், ஏழு தொகுதிகள் தர சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

வி.சி., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
இரட்டை இலக்க எண்ணிக்கையை விட குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை தி.மு.க., கொடுத்தால் உடன்படிக்கை செய்ய வேண்டாம் என திருமாவளவனிடம் வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement