Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தேர்தல் சாதனை ஆட்சியிலும் தொடர விஜய்க்கு தேவை ஒரு சாட்டை!

தேர்தல் சாதனை ஆட்சியிலும் தொடர விஜய்க்கு தேவை ஒரு சாட்டை!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

- எல்.ஆதிமூலம் -
வெளியீட்டாளர், தினமலர்.

நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தல், தமிழக அரசியலை தலைகீழாக புரட்டிப் போட்டிருக்கிறது. 60 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு புரட்சியை நிகழ்த்தி காட்டியிருக்கிறார், ஜோசப் விஜய்.

பெயரில் திராவிடம் இல்லாத ஒரு கட்சி இங்கே ஆட்சிக்கு வரவே முடியாது என்ற வாதத்தை தகர்த்திருக்கிறது, அவருடைய தமிழக வெற்றிக் கழகம். ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒளிந்திருக்கும் சவால்கள் ஏராளம்.

அரசு நிர்வாகத்துக்குள் உள்ள அடுக்கடுக்கான திரைகளை, புதிய அரசு கிழிக்க வேண்டியிருக்கும். கிழித்தால் தான், வெளிப்பார்வைக்கு கவர்ச்சியாக காட்டப்பட்ட அழுக்குகளும், அநீதிகளும் வெளிச்சத்துக்கு வரும்; அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் ஊழலுக்கு, எத்தனை ஊற்றுக் கண்கள் என்பதை அடையாளம் காண முடியும்.

திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் ஒரு அங்குலம் கூட முன்னேறவில்லை என்று சொல்ல முடியாது; அதே சமயம், ஊழல் பேயை ஒழித்துக் கட்டியிருந்தால், இன்னும் பல மடங்கு வளர்ச்சியை நம் மாநிலம் கண்டிருக்க முடியும்.

பல திரைப்படங்களில், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை வதம் செய்யும் நாயகனாக விஜய் நடித்திருக்கிறார். இந்த தேர்தல் மூலமாக, ஒரு விரல் புரட்சியை நிகழ்த்தி காட்டியுள்ள இளைஞர் பட்டாளமும், பெண்களும், அந்த காட்சிகளை நிஜத்திலும் அரங்கேற்ற அவரால் முடியும் என்ற நம்பிக்கையில் தான், அவரை கோட்டைக்கு அனுப்பி இருக்கின்றனர்.

ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம் நடத்தினாலே, ஊழல் ஒழிந்து விடும்; மக்கள் எதிர்கொள்ளும் 90 சதவீத பிரச்னைகள் அதன் மூலமாக தீர்ந்து விடும். எதிர்கால இலக்குடன் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்க, இந்த வெளிப்படைத்தன்மை நன்கு உதவும்.

இலவசங்களை அள்ளி அள்ளி கொடுத்தும், தமிழக பெண்கள் நம்மை ஏன் நிராகரித்தனர் என்ற கேள்விக்கு, ஆட்சியை இழந்தவர்கள் விடை தேடிக் கொண்டிருக்கின்றனர்; கண்ணை மூடிக் கொண்டு சொல்ல முடியும், சட்டம் - ஒழுங்கு பிரச்னை தான் காரணம் என்று!

வேங்கைவயல் தொடங்கி,அண்ணா பல்கலைக் கழக வளாகம் வரை நடந்த சீரழிவுகளுக்கு பின்னணியில் உள்ளவர்கள், இன்னமும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் சுதந்திரமாக திரிகின்றனர். காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதை, நீதிமன்றங்களே வேதனையுடன் சுட்டிக் காட்டும் அவலம் நிலவுகிறது. சாத்தான்குளம் சம்பவத்தில் கிடைத்த நீதி என்பது, ஏனைய அநீதிகளை மறைக்கும் அளவுக்கு கனமான திரை அல்ல.

கட்சிக்காரர்களை காப்பாற்றுவதற்காக காவல் துறையை முடக்குவது விபரீதமான விளையாட்டு. சட்டம் - ஒழுங்கை மட்டுமல்ல, சமூகத்தையே அது நரகக்குழியில் தள்ளிவிடும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அதை காலம் கடந்து புரிந்து கொண்டுள்ளார்.

துவக்கத்தில் இருந்தே காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட்டு, கட்சிக்காரர்களுக்கு கனமான கடிவாளம் மாட்டினால் மட்டுமே, அந்த ஆபத்தில் சிக்காமல், த.வெ.க., அரசு தப்ப முடியும்.

'டாஸ்மாக் கடைகளை மூடுவேன்; நீட் தேர்வை ஒழிப்பேன்' என்று வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை பிடித்த பிறகு, 'ஏன் நிறைவேற்றவில்லை?' என்று கேட்ட ஊடகங்களுக்கு, ஆட்சியாளர்கள் அளித்த எகத்தாளமான பதில்களைக் கண்டு முகம் சுளித்ததை கவனிக்க, ஆட்சியாளர்கள் ஏனோ மறுத்து விட்டனர். எதற்கெடுத்தாலும் திராவிடக் கொள்கை என்ற கேடயத்துடன் மத்திய அரசை எதிர்த்த போக்கை, அதனால் ஏற்பட்ட ஏராளமான திட்ட இழப்புகளை, இளைஞர்கள் அங்கீகரிக்கவில்லை.

ஏற்கனவே இயங்கும் ஆலைகளின் பிரச்னைகளை தீர்த்து வைக்க எந்த முன்னெடுப்பையும் தொடங்காமல், தொழில் முதலீடுகளை ஈர்க்கப்போகிறோம் என்று பெருங்குழுவுடன் நாடு நாடாக பயணம் சென்று வந்து, பக்கம் பக்கமாக விளம்பரங்கள் கொடுத்ததை தொழில் உலகம் கண்டுகொள்ளவில்லை.

சொந்த ஊருக்கு போவதற்கும், திருவண்ணா மலையில் கிரிவலம் செல்வதற்கும் பஸ் வசதி செய்து கொடுக்க இயலாத அரசாங்கம், கட்சிக்காரர்களுக்கு வேலை கொடுப்பதற்காக நஷ்டத்தில் போக்குவரத்து கழகங்கள் நடத்துவதை மக்கள் ஜீரணிக்கவில்லை.

ஜாதி ஒழிப்பை திராவிட கொள்கை பிரகடனமாக அறிவித்தவர்கள், அதிலிருந்து வெகுதுாரம் விலகிச் சென்று ஒவ்வொரு ஜாதியாக தலைவர்களை தேடி கண்டுபிடித்து மக்களின் வரிப்பணத்தில் மணி மண்டபம் கட்டித் திறந்ததை அந்தந்த ஜாதியினரே பொருட்படுத்தவில்லை.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை பிழைகள் இருக்கின்றன, அரசு நிர்வாகத்தில். அனைத்தையும் களைந்தால் தான் நல்லாட்சி வழங்க முடியும் விஜய் அரசால். அதற்கு தேவையான அனுபவ அறிவு கொண்டவர்கள் அவரிடம் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பது நாட்டுக்கு தெரியாது.

குறுகிய, சுயநல, திராவிட சித்தாந்த கண்ணோட்டம் இல்லாத உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற அனுபவசாலிகள் பலர் இருக்கின்றனர்; அவர்களில் சிறந்தவர்களை துறைவாரியாக அடையாளம் கண்டு ஆலோசகர் குழு உருவாக்கினால், அரசுக்கு நல்ல யோசனைகள் கிடைக்கும்.

நடை, உடை, பேச்சு, பிரசாரம் என பல வகையிலும் இதுவரை தமிழக தலைவர்கள் எண்ணிப் பார்க்காத மாற்றங்களை விஜய் பின்பற்றி வருகிறார். அதே மாற்றத்தை அரசு நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் செய்யத் துணிந்தால், த.வெ.க.,வுக்கு ஓட்டு போட்டவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தமிழகம் முன்மாதிரி மாநிலம் ஆகும்.

மிகப்பெரிய சவால் தான்; ஆனால், சாதிக்க முடியாதது அல்ல!

Advertisement

மே 08, 2026 12:43 pm

எங்கள் நேரத்தை ஒதுக்கி எழுதிய ஆலோசனைகள், கருத்துக்கள் எழுதியது வீணாகிவிடுமோ?. இல்லை அனைத்தையும் அறிந்துகொடும் ஆறுமாத்துக்குள் தடயத்தை அழித்து விடுவார்கள், இரண்டு திருட்டு திராவிடம். டெல்கியில் இரண்டும் லோபி செய்கிறார்கள். விஜய் உங்களி கெடுத்தவன் காங்கிரஸ்.

Reply Rate this
மே 08, 2026 11:32 am

கருத்து என்ற பெயரில்... திராவிட சித்தாத்தந்தின்மீது வன்மத்தை கக்கியுள்ளீர்கள். ////திராவிட ஆட்சியில் தமிழகம் ஒரு அங்குலம்கூட முன்னேறவில்லை என்று சொல்லவில்லை... ஊழல் இல்லாமல் இருந்திருந்தால், வளர்ச்சி பலமடங்கு இருக்கும்//// உங்கள் மனச்சாட்சியை தனியே கழட்டி வைத்துவிட்டு கருத்து பதிவிட்டிருக்கிறீர்கள்...? ஏதோ உங்கள் கண்ணை மறைக்கிறது... அது எது என்பதை நான் சொல்வதைவிட உங்களுக்கே அது தெரியும். 1967 முதல் 2026 வரை ஒரு அங்குலம்தான் முன்னேறியிருக்கிறது... ஆம்... நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் இல்லை என்பது உண்மைதான்... உங்கள் பார்வை அப்படி...? ஒரு கவிஞன் எழுதியதை குறிப்பிட விரும்புகிறேன். “நானோ வானில் பறக்கும் பறவை... நீயோ தரையில் உலவும் மிருகம்... வானில் பறக்கும் பறவையின் பார்வையின் நீட்சி அதிகம்... ஆனால், மிருகத்தின் பார்வை கை எட்டும் தூரத்தில் மட்டுமே”... நீங்கள் சொன்ன தமிழகத்தின் முன்னேற்றம் என்பது ஒரு அங்குலம் என தாங்கள் குறிப்பிட்டுள்ளது “தரையில் உலவும் மிருகத்தின் பார்வை” போன்றது. கண்களை சுருக்கிக் கொண்டு பார்த்தால்... தெளிவு இருக்காது அல்லவா... உங்கள் பார்வையின் குறைபாடு... அல்லது... பார்வையின் நோக்கத்தில் உள்ள குறைபாடு... உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஒரு அங்குல முன்னேற்றம்தான் இருந்ததா...? அப்போது... பாஜக ஆளும் பீகார் பத்து அங்குல முன்னேற்றம் அடைந்துள்ளதா... அப்புறம் ஏன், பீகாரிலிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றிட, பஞ்சம் பொழைக்க தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் தமிழ்நாட்டு ஓடி வருகிறான்... இது திராவிட கட்சிகளின் சாதனை அல்லவா... உங்கள் எண்ணப்படி தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆட்சியில்... மும்பைக்கு ஓடினான் தமிழன், பஞ்சம் பொழைக்க... தற்போது...பீகார், ஒடிசாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஓடி வருகிறான்..ஏன்...? உங்களுக்கு இந்த நடிகன் வானளாவிய அதிகாரம் பெற்றுவிட்டான் என்ற காரணத்தால்... சொம்பு தூக்கிக் கொள்ளுங்கள், அது உங்கள் விருப்பம்... ஆனால், அதற்காக முன்னேற்றத்தை குறை சொல்வது ஒரு கல்வி கேள்வியில் சிறந்தவர் செய்கிற காரியமா...? இவர் அப்படியே வந்து வெட்டி முறிச்சிடுவார். “மொச புடிக்குற மூஞ்சப் பார்த்தாலே தெரியாது... இந்த நாய் மொசப் புடிக்குமா, புடிக்காதான்னு...?” அப்படீன்னு கரிசல்காட்டு பழமொழி ஒன்று உண்டு என்பதை தாங்கள் அறிவீர்களா...? காட்டு முயலை பிடிக்க செல்லும் வேட்டை நாயின் மூஞ்சை பார்த்தாலே தெரிந்துவிடும், அது வேகமாக பறக்கும் முயலை விரட்டி பிடிக்குமா... பிடிக்காதா...? என்பதுதான் அர்த்தம். இவ்வளவு பெரிய அறிவாளியான தாங்கள் விஜய்யிடம் அப்படி என்ன தகுதியை கண்டீர்கள்... “மக்களிடம் செல், மக்களிடம் பழகு, அம்மக்களின் எண்ணம் என்னவென்று அறிந்து கொள்... அங்கிருந்தே தொடங்கு மக்கள் பணி” என்பதுதான் மக்கள் பணியாற்றுபவனுக்கு பெரியோர் சொன்ன அறிவுரை... தற்போது தாங்கள் போற்றும் விஜய்... இவற்றில் அடிப்படைகளில் முதல் இரண்டான.... மக்களிடம் சென்றாரா... மக்களிடம் பழகியிருக்கிறாரா...? மக்கள் எல்லாம் அடிமைகள் போலவும், இவர் என்னவோ ராஜராஜசோழ சக்கரவர்த்தி போலவும்... பொதுவெளியில் அவருடைய நடவடிக்கைகளை நல்ல நடவடிக்கை என்று எடுத்துக்காட்ட முடியுமா...? மக்களை மதிப்பவன்தான் நல்ல தலைவனாக முடியும்... ஒரே ஒரு எடுத்துக்காட்டு... தி.நகரிலிருந்து பிரச்சாரத்தை முடித்து புரசைவாக்கத்திற்கு பிரச்சாரம் செல்லவேண்டிய விஜய்... மணி 6 ஆகியதும் பிரச்சார வண்டியிலிருந்து இறங்கி... தன் காரில் வீட்டுக்கு திரும்புவதுதான் மக்களை மதிப்பதா... அவரை உயிருக்கு உயிராக நேசித்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த தொண்டர்களை... மக்களை பார்க்காமல் செல்லும் இவன் எப்படி ஒரு தலைவனுக்குரிய தகுதியுள்ளவன்... இவர் எப்படி ஒரு மாநிலத்தை ஆளும் தகுதி உள்ளவனாக முடியும்... உங்கள் சொற்படி... நல்ல அதிகாரிகளை கொண்டு மக்களுக்கான திட்டங்களை உருவாக்குகிறான் என்று வைத்துக் கொண்டாலும், அத்திட்டம் மக்களுக்கு பயன்படுமா? எப்படி பயன்படும்? எந்நேரத்தில் எப்படி பயன்படும்? என்ற புரிதல், அறிதல் வேண்டுமல்லவா...? “பல திரைப்படங்களில் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை வாதம் செய்யும் நாயகனாக நடித்திருக்கிறார்” என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்... நீங்களும் ஒரு திரைப்பட ரசிகன் மனநிலையில் எழுதியிருக்கிறீர்கள்... அதாவது, தமிழ்நாடே “தற்குறி” என்று அழைக்கும் கூட்டத்தினரைப் போலவே திரைப்பட கதாநாயகனாக நடித்ததை உதாரணமாக எடுத்துக்காட்டியுள்ளீர்கள்... சிறப்பு... கிட்டதட்ட 9 கோடி மக்களை காப்பாற்றும்.. அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் ஒரு மாநில முதலமைச்சரின் தகுதி என்னவென்பதை விஜய் ரசிகர் போலவே கூறியுள்ளீர்கள்... விஜய்க்கு ஓட்டுக்கு போடலைன்னா... என் குடும்பத்தையே சோத்தில் விஷம் வைத்து கொன்றுவிடுவேன்...என்று சொன்ன விஜய்...யின் தீவிர ரசிகையை மிஞ்சிவிட்டீர்கள்... இந்த திரைப்பட கதாநாயகன் உதாரணம்...? ஒரு நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர்... அதிகாரிகள் சொல்வதை மட்டும் கேட்டு கையெழுத்து போட்டால்.. திட்டங்களை தீட்டினால்... அந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாக போவார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா...? இறுதியா... தங்கள் மனதில் உள்ள எரிச்சலை கருத்துக்களாக பதிவு செய்து எங்கள்மீது... தமிழ்நாட்டு மக்கள்மீது திணித்திருக்கிறீர்கள்.

உன் ஆசை எக்காலத்திலும் நிறைவேற வாய்ப்பில்ல... ராசா...? வடக்கன்ஸ்....சை விட படித்த, அறிவு மழுங்கிய முட்டாள்களாகிய தமிழ்நாட்டு மக்கள் நடிகனை தேடிபிடித்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்த்தியுள்ளனர். இத்தனை நாட்களாய்... வடஇந்தியர்களை... இந்திக்காரர்களை தப்பாக திட்டியதற்கு மன்னிப்பு கோருகிறேன்... ஏனெனில்... அவர்களாவது படிப்பறிவின்மை, சமுதாய முன்னேற்றமின்மை போன்ற இல்லாமையின் காரணமாக முட்டாள்களாக இருந்திருக்கிறார்கள்... அதில் தவறில்லை... ஆனால், படிப்பறிவும், அறிவாளிகளுமான தமிழ்நாட்டு மக்கள் படித்த, பண்பட்ட முட்டாள்களாய் இருந்திருக்கிறார்கள்... அவர்கள் தன் தலையிலே... மண்ணை அள்ளிக் கொட்டிக் கொள்ளவில்லை... நெருப்பை அள்ளி தங்கள் தலையிலே கொட்டிக் கொண்டார்கள்...? ஆரூராரே... கவலைப்படாதீங்க, உங்க கட்சியின் கைவிரலுக்கேற்ப ஆடும் “பொம்மலாட்ட பொம்மை”தான் விஜய்...? ஆட்டுவிப்பவன்படியே ஆடுவான் இந்த நடிகன்...?

Reply Rate this
மே 07, 2026 09:42 am

உயர்பதவி வகித்த செட்டிநாட்டுக்காரனின் கூற்று ..தமிழ்நாட்டில் இனிமேல் ஏசியன் வங்கிகளில் கடன் வாங்கி தமிழக அக்காளின் மேல் கடன் சுமாய்யை ஏற்றாதீர்கள். நாடு இரவிலு பெண்களும் ஆண்களும் பயனில்லாமல் சாலைகளில் செல்லவேண்டும்

சிங்கப்பூர் சட்டத்திட்டம் போல போதைப்பொருள் வைத்திருப்பவர்கள் கடுமையான தண்டனை ஏன் துக்கு தண்டனை கொடுக்கலாம் கடன் சுமைகளை குறைக்க டாஸ்மாக் பக்கம் செல்லாமல் வேறு வழிகளை கடைபிடிக்கவேண்டும்.

போக்குவரத்து துறையில் பஸ் பெர்மிட்களை பெண்களுக்கு விற்பனை செய்யலா, சுமார் 200 கிலோமீட்டர் தூரம் வரை தனியார் பஸ் செல்லவிடலாம்.

Reply Rate this
மே 06, 2026 08:46 pm

வெகு நல்ல அறிவுரை பண்பட்ட பத்திரிகையாளன் என்ற பொறுப்பு, ஆய்ந்து அலசப்பட்டு எழுதப்பட்ட நடுநிலை கருத்துக்கள், இவைகள் மூலம் மீண்டும் மிளிரும் தினமலருக்கு வாழ்த்துக்கள்

Reply Rate this
மே 06, 2026 07:18 pm

வாய்ப்பு இல்லை கூட இருப்பவர்கள் எல்லாம் அந்த கட்சியில் வந்தவர்கள், ஆட்சி காப்பாற்ற முடியுமா என்று வேண்டுமானால் யோசிங்க ஜெனரல் செகிரேட்டரி எப்படி பணம் செலவு செய்வர்? கம்பு சுத்த இது சினிமா இல்ல .. வோட்டு போட்டவர்கள் இது தெரியாமல் சினிமா என்று நினைத்து அனுபவம் இல்லாதவரை தேர்ந்து தமிழகம் அழிய வழி செய்து உள்ளார்கள்

Reply Rate this
மே 06, 2026 06:00 pm

சாராய ஆலையை அரசே எடுத்து நடத்தினால், தங்களது வாக்குறுதியை நிறைவேற்றிவிடலாம்.ஒழுங்கு படுத்தலாம்... அரசு கட்டுக்குள் கொண்டுவரலாம். சாராய ஆளை அதிபதிகள் கனிமொழி, சசிகலா, டி.ஆர்.பாலு, திராவிட மாடல் குடும்பம், உடையார் ... இவர்கள் தான். குதிரை கொம்பான விஷயம்...

எடுத்தவுடன் எந்த கொம்பனாலும் முழு மதுவிலக்கை கொண்டுவரமுடியாது. கோடிக்கணக்கான பணம் கொட்டும் சொர்க்கவாசல், மக்களின் உயிரும் அடங்கும்...

எம்.ஜி.ர். ஒரு பக்தி, சக்திமானுக்கு உரிமம் கொடுத்து இருக்கார். அவர் " இது பல குடும்பத்தை குடி கெடுக்கும் தொழில் , எனவே வேண்டாம் " என்று மறுத்துவிட்டார். மிகவும் கட்டாய படுத்திருக்கார். வேண்டும்மானால் எனது உறவினருக்கு, உங்கள் சம்மதத்துடன் கொடுத்து நடத்த சொல்லுகிறேன் என்று கொடுத்துவிட்டார். ஆனால் அந்த உறவினர் எடுத்து நடத்தி மிக பெரிய கோடீஸ்வரர். ஆனால் அந்த குடும்பம் சோவிக்கவில்லை, மகிழ்ச்சில்லை... சமீபத்தில் கைமாறிவிட்டது. இது குடியை கெடுக்கும் தொழில்.... கொஞ்சம், கொஞ்சமாக குறைக்க முடியம் ஆனால் முற்றிலும் எந்த கொம்பனாலும் நிறுத்தமுடியாது. பல நிபுணர்கள் ஒன்றுகூடி முடிவு எடுக்கவேண்டிய விஷயம்.

Reply Rate this
மே 06, 2026 06:25 am

யார் ன்ன பேசினாலும் தேர்தலுக்கு பணம் வேணும். கட்சிக்கு பலதரப்பட்டர் நிதி கொடுப்பார்கள். அது மட்டும் போதாது. எம்ஜியார் செய்தது போல் டாஸ்மாக் மது உற்பத்தியை ஒருவரிடமே கொடுக்க வேண்டும். அதில் வரும் லாபத்தில் எம்ஜியார் காலம் போல் தேர்தலுக்கு அந்த கம்பெனி தேர்தலை பார்த்து கொள்ளும். அதற்க்கு எம்ஜியார் போல் அப்பழுக்கற்ற தலைவர் தேவை. இப்பாட்டி டாஸ்மாக் மது கொள்முதலை மாற்றினால் திமுக, அதிமுக கம்பெனிகளின் ஆதிக்கம் விடுபடும். மத்தியில் பிஜேபி என்ன செய்கிறது. அத்தாணியை பிஜேபி பார்த்துகிறது .அவர் தேர்தல் நிதியாக பிஜேபிக்கு 3000 கோடி கொடுத்துள்ளார். உலகளவில் எல்லா அரசியல் காட்சிகளிழும் இப்படித்தான் பணம் வாங்குகிறார்கள். அரசியல் வாதிகளுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்கள் தியாகிகளாக இருக்கணும் என்று எதிர்பார்க்க கூடாது. தேர்தல் செலவை கட்சி பார்த்து கொண்டாள் ஊழல் குறையும். எப்படியோ தமிழகத்தில் ஒரு புதிய நிலை உருவாக்கி உள்ளது. இதை நல்ல படியாக உபயோகிக்க வேண்டும். மாற்றம் தான் முன்னேற்றத்தின் முதற் படி. .

Reply Rate this
மே 06, 2026 03:52 am

மாநிலம் வளர மத்திய அரசுடன் முரண்டு பிடிக்காமல் கவர்னரை மதித்து நடக்க வேண்டும். பேக்கஜ் போடுவது தவிர்த்து மக்களை முன்னிலைப்படுத்தினால் மரியாதை வரும். இன்னும் சமூக நீதிக்குள்ளேய சுற்றித்திரிந்தால் ஒருவரும் மதிக்க மாட்டார்கள். திம்க்காவின் அராஜகம் இன்னும் 70க்கு மேற்பட்ட தொகுதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.

Reply Rate this
மே 05, 2026 10:48 pm

திரு ஆதிமூலம் சார் அவர்களின் பதிவு என்னுடய் எதிர்பார்ப்பும் அப்படியே உள்ளது.. விஜய் அவர்கள் எப்படி செயல் படுகிறார்கள் என்று பொறுத்து இருந்து பார்போம்... அவருக்கு ஓர் ஆண்டாவது கொடுப்போம் இந்த சாஅகடையய் சுத்தம் செய்ய.. இந்த் தேர்தல் நம்க்கு எடுத்த பாடம்
தமிழக மக்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் களை அடித்து விட்டார்கள். ஒன்று காலம் காலமாக 40 முதல 50 வருடங்களாக கண்மூடித்தனமாக் சின்னம் பார்த்து வாக்களித்து வந்தது. இரண்டு பண்ம் காசு வாங்கி விட்டு மனசாட்சி உறுத்துமே என்று காசு கொடுத்தவருக்கு வாக்களித்தது.. இரண்டில் இருந்தும் தமிழக மக்களை திராவிட அடிமை வாழ்க்கை எனும் விலங்கினை இன்றய இளைஞர்கள் உடைத்து தூக்கி கடாசி உள்ளார்கள்..... இதன் விழைவு ஆட்சிக்கு வந்துள்ளவர்களுக்கும் அடுத்து ஆட்சிக்கு வருபவர்களுக்கும் இதே நிலை உண்டாகலாம் சிறப்பாக் செயல் ஆற்றவில்லை என்றல் என்கிறபயம் உருவாக்கி இருக்கும்.
புதிதாக் அண்ணாமலி கட்சி தனியாக ஆரம்பித்தால் மக்கல் மாற்றாக திராவிட் மாயை இல்லத மாற்று அரசாட்சி விரும்பு அவர்களி வெற்றிபெற செய்வாகள்.
மொத்தத்தில் நமது 1960-2000 தலை முறையினர் 40 முதல் 80 + வயதினர் மாற்றி மாற்றி இரு திராவிட கட்சிகளை தூக்கி எறிய பயந்து மாற்றாக புதிய ஒரு கட்சியய் தேர்ந்து எடுக்கவே பயந்து வாழ்ந்தோம். கூட்ட்டணி எங்கிற பூனை , புலி, சிறுத்தை, சிங்க்கம் என வெவ்வேறு போர்வையய் பயன் படுத்தி நம்மை ஏமாற்றிய இரு திராவிட மாடெல்கள். ஆனால் இனி நாமும் இளைஞர்களுக்கு ஆதரவாக அவர்களுடன் கை கோர்த்து அடுத்த் தேர்தலில் 2027 மக்களவை அல்லது 2031 மாநிலங்களவை தேர்தலைல் பங்க்களிப்போம்

Reply Rate this
மே 05, 2026 10:48 pm

Very good article. A well thought one. TheyTVK have to enforce all the points mentioned in your article. Let us wait and see.

Reply Rate this