Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


செவ்வாய்கிழமையும் விஜய் பிரசாரம் ரத்து

செவ்வாய்கிழமையும் விஜய் பிரசாரம் ரத்து
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தவெக தலைவர் விஜய் நாளை செவ்வாய்க்கிழமை சென்னையில் மேற்கொள்ள இருந்த பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல்முறையாக தேர்தல் களம் புகும் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூரில் போட்டியிடுவதற்கு கடந்த30ம் தேதி தாக்கல் செய்து பிரசாரத்தை துவக்கினார். பின் கொளத்தூர் சென்ற அவர், கூட்ட நெரிசலில் சிக்கியதால் வில்லிவாக்கத்தில் மேற்கொள்ளஇருந்த பிரசாரத்தை ரத்து செய்தார்.
வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம், திநகர் ஆகிய நான்கு இன்று நடக்கவிருந்த விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுத்து இருந்தது. அதேநேரத்தில் வில்லிவாக்கம் தொகுதியில் பகல் 12 மணி முதல் மதியம் 1 மணிக்குள்ளும், திநகர் தொகுதியில் மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், நேரம் போதுமானதாக இருக்காது என்பதால், விஜயின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
நாளை செவ்வாய்க்கிழமை சைதாப்பேட்டையில் விஜய் பிரசாரம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கு ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளித்து இருந்தனர்.ஆனால், தவெக சார்பில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

ஏப் 07, 2026 08:14 pm

எம்ஜிஆர் சுமார் 20 வருடங்கள் அரசியலில் இருந்து ஊரெல்லாம் சுற்றி மக்களை அடிக்கடி சந்தித்தார். அதற்கு துணையாக கட்டுக்கோப்பான கட்சி இருந்தது. தடால் என்று தேர்தலில் போட்டியிட வரவில்லை. அவரது வெற்றியை பார்த்து ஆசைப் பட்டால் புலியை பார்த்து பூனை சூடு சூடு போட்டு கொண்ட கதை தான் என்று சொல்ல ஆளில்லை. அவரை சுற்றி வந்து கும்மி அடிக்கும் கூட்டம் அவர் செலவிட இருக்கும் அளவற்ற காசுக்காக தான் என்று எப்போது புரியுமோ? கான மயிலாடக் கண்ட வான்கோழி தானும் அதுவாக பாவித்ததாம்.

Reply Rate this
ஏப் 07, 2026 04:21 am

அண்ணே எப்பதான் வெளில வருவார், பிரச்சாரத்த தொடங்குவார். தேர்தல் வருகிற 23ஆம் தேதி, இவர் அடுத்த வருட ஏப்ரல் 23 என்று நினைத்து கொண்டிருக்கிறாரோ? யாராவது எடுத்து சொல்லுங்கப்பா.

Reply Rate this
ஏப் 07, 2026 01:58 am

TMC/VIJAY is given utmost troubles while DMK/Stalin & Udayanidhi etc are given complete freedom - in connection with General Election meetings, roadshow etc Police are not impartial and act to the whims and fancies of Stalin, DMK ,etc

Reply Rate this
ஏப் 07, 2026 12:06 am

பேசாம கட்சியையே ரத்து செய்யலாம்

Reply Rate this
ஏப் 06, 2026 11:51 pm

நாட்டுக்கு ஒருநாள், வீட்டுக்கு ஒருநாள் - ..... கட்டளை..

Reply Rate this

விஜய் வருவதற்கே நாலு மணிநேரம் ஆகும். போனமுறை பத்து மணி நேரம் லேட்டா வந்து தான் நாற்பத்தியொரு பேரை தூக்கினார். அதனால் ஒரு மணிநேரம் எல்லாம் பத்தாது. நாலு அணில் அடிபட்டு செத்தால் தானே, ஹீரோவுக்கு மவுசு ஏறும்.

Reply Rate this
ஏப் 06, 2026 11:12 pm

அரசு சும்மா எடக்கு பண்ணக்கூடாது. கூட்டம் சேரட்டும். நடக்கவேண்டியது நடக்கட்டும் என்று விட்டுவிடலாம். பட்டும் திருந்தாத ஜென்மங்களை என்ன சொல்வது, என்ன செய்வது.

Reply Rate this

நாளை வெய்யில் அதிகமோ ??

Reply Rate this